
முனைப்பாடியார்- புகுமுன் சிறுகுறிப்பு - சமண சமயத்தைச்சார்ந்தவராக காணப்படும் முனைப்பாடியார் எனும் நல்லாசிரியரால் இயற்றப்பெற்ற இவ்வறநூல். சமூகத்திற்கான சீர்கருத்துகளை நல்ல மேற்கோள்களால், எளிமையான சொற்களால் விளக்குகின்றன. திருக்குறளின் சொல்லாட்சிகள் பற்பல இதன் காணபடுகின்றன. புரத்திரட்டு எனும் பழம் தொகுப்பு நூலில் இதன் கண்ணதான 34 பாடல்கள் உள்ளமை இத்திரட்டின் அக்காலத்திய சிறப்பு போதரும்.
226 வெண்பாக்களால் ஆன இன்னுல் பெயர் கொண்டு ஆசிரியர் 'முனைப்பாடி' எனும் இடத்தைச் சார்ந்தவர் ஆகவேண்டும். இவ்வாறு வழங்கும் அரசாளும் நாட்டுப் பிரிவினையை சேக்கிழார் தன் திருத்தொண்டர் புராணத்தில் 18 இடங்களில் குறித்து நாவுக்கரசர் சுந்தரர் எனும் இரு தேவார ஆசிரியர்களை ஈன்ற பீடுடைய நாடாக காட்டுகின்றார். இ·து தற்கால தமிழ்நாட்டு பிரிவினதான கடலூர் விழுப்புரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டமையும்
நூல்
1 தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
பூவின்மேல் சென்றான் புகழடியை - நாவில்
தரித்தீண்டு அறநெறிச் சாரத்தை தோன்ற
விரிப்பன் சுருங்க விரைந்து
2 மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்
பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
கேட்கும் கருத்துடை யோரே பிறவியை
நீக்கும் திருவுடை யார்
3 உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
உரைத்தத னாலாயய பயனும் - புரைப்பின்றிய
நான்மையும் போலியும் நீக்கி அவை நாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு
4 அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலங்கள் மாட்டும்
இறங்காது இருசார் பொருளும் - துறந்தடக்கி
மன்னுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல்
பன்னுதற்குப் பாற்பட்ட வன்
5 பிள்ளை பேய்ப்பித்தன் பிணியாளன் பின்நோக்கி
வெள்ளைக்களி விடமன் வேட்கையால் - தெள்ளிப்
புகைக்ககப் பொரு ளுணர்வான் என்றிவரே நூலை
உரைத்தற்கு உரிமை யிலாதார்
6 தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் - இன்சொல்லை
என்றிருந்தும் கேளாத ஏழை எனயிவர்கட்கு
ஆன்றவர்கள் கூறார் அறம்
7 தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
வடுமாற்றம் அஞ்சித் தற்காப்பான் - படுமாற்றல்
ஒப்புரவு செய்து ஆண்டுறுதிச் சொல் சேர்பவன்
தப்பா¡ன் தருமு ரைக்கு
8 ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறித்தி
பாவிட்டார்க் கெல்லாம் படுகுழியாய் - காவிட்டு
இருமைக்கும் ஏமம் பயவா எனவே
தருமத்துப் போலிகள் தாம்
9 வினையுயிர் கட்டு விடின்ன விளக்கி
தினையனைத்தும் தீமையின் றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்தது உலகினொடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டு மிடத்து
10 புல்ல உரைத்தல் புகழ்தல் பொருளீதல்
நல்லரிவ ரென்று நட்பால் - சொல்லின்
அறம் கேள்வியால் ஆம்பய னென்றுரைப்பார்
மறங்கேள்வி மாற்றி யவர்
11 காட்சி யொழுக்கொடு ஞானம் தலைநின்ற
மாட்சி மனைவாழ்தல் அன்றியும் - மீட்சில்
வீட்டுலகம் எய்தல் எனயிரண்டே நல்லறம்
கேட்டதனா லாய பயன்
12 அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
செவ்விதின் நீக்கி சினம் கடுந்து - கவ்விய
எட்டுறுப்பினா யியல்பின் நற்காட் சியார்
சுட்டறுப்பர் நாற்கதியுட் துன்பு
13 அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்க பாசண்டமே தீத்தெய்வம் - மெச்சி
வணங்குதல் அவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களில் குன்றா தவர்
14 மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய்தந்தை
முன்னி முடிக்கும் முனி யாசான் - பன்னியங்கு
ஆய குரவரிவர் என்ப வையத்துத்
தூயகுலம் சாதியார்க்கு
15 மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
தாமோங்கு உயர்வரை மேல் சாவீழ்தல் - காமம் கொண்டு
ஆடோடு எருமை அறுத்தல் இவை உலக
மூடம் என உணறற் பாற்று
16 கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு
பெண்டிரைப் பேதுற்றுக் கொன்றானும் - பண்டிதனாய்
வாழ்விப்பக் கொண்டானும் போல்வாரே வையத்துக்
கோள் விற்பக் கொள்ளா நிற்பர்
17 தோற்காவி சீரைத்துணி கீழ்விட விடுத்தல்
கோற்பாய் கரகம் குடை செருப்பு - வேலோடு
பல்லென்பு தாங்குதல் பல்சண்டி மூடமாய்
நல்லவரால் நாட்டப் படும்
18 ஆவரண மின்றி யடுவானும் யானைதேர்
மாவரண மின்றி மலைவானும் - தாவில்
கழுதை யிலண்டம் சுமந்தா னும்போல்
பழுதாகும் பாசண்டி யர்க்கு
19 சக்கரன் நான்முகற் சங்கரற் பூரணன்
புத்தற் கபிலன் கணாதனென் - றெத்திறத்து
ஏகாந்த வாதிகள் எண்கெட்ட ஆதன்போல்
ஆகாதாம் ஆத்தற் துணிபு
20 அறியுடைமை மீக்கூற்ற மான குலனே
உறுவலி நற்றவம் ஓங்கிய செல்வம் - பொறி
வனப்பின் எம்போல்வா ரிலென்னு மெட்டும்
இறுதிக்க ணேமாப் பில
21 ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
செய்பழி நீக்கம் நிறுத்தல் - மெய்யாக
அன்புடைமை ஆன்ற அறவிளக்கம் செய்தலொடு
யென்றிவை யெட்டாம் வுருப்பு
22 நிறுத்தறுத்து சுட்டுரைத்து பொன்கொள்வான் போல
அறத்திறனு மாராய்ந் துள்புக்கால் - பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும் ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு
23 காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண்
ஆய்த லறிவுடையார்க் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்
24 இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
அறத்தானு மி·தே சென்றாற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனா லாராய்ந்து
நம்புக நல்ல அறம்
25 ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப்பொருள் தெரிந்து - ஒன்றோடொன்
றொவ்வா உயிரோம்பி உற்றூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம்
26 துறந்தார் துறந்தில ரென்றறிய லாகா
துறந்தார் கொண்டொழுகும் வேடம் - துறந்தார்
கொள்ப கொடுப்பவற்றால் காணலாம் மற்றவர்
உள்ளம் கிடந்த வகை
27 இந்தியக்கு ஒல்கா யிருமுத் தொழில்செய்தல்
சிந்தைதீர் அப்பியத்தின் மேலாக்கல் - பந்த
மரிதலிவை யென்றும் ஆறொழுகு வார்க்கே
உரிதாகு மும்ப ருலகு
28 அழலடையப் பட்டா னதற்கு மாறாய
நிழலாதித னியல்பே நாடும் - அழலதுபோல்
காமாதி யாலாம் கடுவினைக் கட்டறுத்துப்
போமாறு செய்வார் புரிந்து
29 வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்பார் விதியறிவார் - வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான்செய் வினையைத்
துணிப்பதுஉம் தூய ஒழுக்கு
30 தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
தொலைவில் துணிவொடு பக்கம் - மலைவின்றி
நாட்டி யிவ்வாறும் உரைப்பாரே நன்நெறியைக்
காட்டி யறமுறைப் பார்
31 தத்தம திட்டம் அதிட்டம் எனயிவற்றொடு
எத்திறத்தும் மாறாப் பொருளுறைப்பர் - பித்தரவர்
நூல்களும்பொய் யேஅந்நூல் விதியின் நோற்பவரும்
மால்களென உணரற் பாற்று
32 குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டு தம்முன்
தெருட்டி வழிசொல்லிச் சேரல் - திருட்டோட்டம்
மாறுகொள கிடந்த மார்கத்தால் நற்கதியில்
ஏறுதும் என்பார் இயல்பு
33 அற்றறியும் காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
கற்றறிந்த மாந்தர் உரைப்பவே - மற்றதனை
மாட்சி புரிந்த மதியுடை யாளரே
கேட்பர் கெழுமி யிருந்து
34 உருவு மொழுக்கமும் நூலும் பொருளும்
பொருளில் தலைமகனோடு யின்ன - ஒருவாது
கண்டு கருதி கயக்கறத் தேர்ந்தபின்
கொண்டு வீடேற்க அறம்
35 நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யயாம்
சால்பின்மைக் காட்டும் அவர்ச் செய்கை - பால்வகுத்துப்
பட்டிமையா லாகா பரமார்த்தம் பத்திமை
யொட்டுவான் உய்ந்துபோ வான்
36 புனைபடை கொண்டஞ்சித் தற்காப்பான் தன்னை
வினைகடியு மென்று யடிவீழ்தல் - பனையிருட்கண்
பல்லெலி தின்னப் மறைந்திருந்த பூனையை
இல்லெலி காக்குமென் றற்று
37 மாடமும் மண்ணீடும் கண்டடக்கம் இல்லாரைக்
கூடிவழிபடும் கோளமை - ஆடரங்கின்
ஏவகமாய் நினறானோர் கூத்தனை ஊர்வேண்டிச்
சேவகமாய் நின்ற துடைத்து
38 நாற்றமொன்று இல்லாத பூவொடு சாந்தினை
நாற்றம்தான் வேண்டியது போலும் - ஆற்ற
மறுவறு சீலமும் நோன்பு மில்லாரை
உறுபயன் வேண்டிக் கொளல்
39 மாகடல்சூழ் வையகத்து மையாதாம் காத்தோம்பி
பால்கருதி யன்னது உடைத்தென்பர் - மேல்வகுத்து
மன்னிய நற்குணம் இலாதாரைத் தாம் போற்றிப்
புண்ணியம் கோடும் எனல்
40 உடங்கமிழ்தம் கொண்டா னொருவன் பலரும்
விடம்கண்டு நன்றிதுவே என்றால் - மடம் கொண்டு
பல்லவர் கண்டது நன்றென்று அமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமொ நஞ்சு
41 அருள் வட்டமாக அறிவு கதிராய்
பொருள் வட்டமெல்லாம் விளக்கி - இருள் வட்டம்
மாற்று மறிவான ஞான வளரொளியான்
வேற்றுலிங்கம் தோன்றும் வெளிறு
42 தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
பன்னியறம் உரைக்க வல்லாரை - மன்னிய
சிட்ரென்ன சிட்டரென் றேத்துவார் அல்லாரைச்
சிட்டரென் றேத்தல் சிதைவு
43 எத்துணைக் கற்பினும் ஏகாந்த வாதிகள்
புத்தியும் சொல்லும் பொலிவிலவா - மிக்க
அறிவன் நூல்கற்றா ரலயென வேநிற்கும்
எறிகதிர்முன் நீள்சுடரே போன்று
44 பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம்
அலர்கதிர்ஞா யிற்றைகைக் குடையும்கரத் - திலையோ
கற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல்
45 இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி
உம்மை உயர்கதிக்கு உய்த்தலால் - மெய்மையே
பட்டாங்கு அறமுரைக்கும் பண்புடை யாளரே
நட்டா ரெனப்படு வார்
46 நட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்து
பட்டால் பலபிறப்புத் துன்பமென் - றொட்டி
அறநெறியை கைவிடா தாசாரங் காட்டி
பிறநெறி போர்க்கிற் பவர்
47 நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்
விட்டாரை யல்லாற் கொளல்வேண்டா - கட்டார்
பொறிசுணங்கு மென்முலைப் பொன்னனாய்
மறிதரவு யில்லாக் கதி
48 காலொடு கையமுக்கி பிள்ளைவாய் நெறித்து
பாலொடு நெய்பெய்யும் தாயனையர் - சால
அடக்கத்தை வேண்டி அறன்வலிந்து நாளும்
கொடுத் தொழுகு வார்
49 காய உரைத்தும் கருமம் சிதையாதார்
தாயரொடு ஒவ்வாரோ தக்கார்க்கு - வாய்பணிந்து
உள்ளமுருக உரைத்துப் பொருள் கொள்வார்
கள்ளரொடு ஒவ்வாரோ தாம்
50 முன்னின்று ஒருவன் முகத்திலும் வாயினும்
கன்னின் றுருகக் கலந்துரைத்து - பின்னின்று
இழித்துரைக்கும் சான்றோரை அஞ்சியே தேவர்
விழித்திமையா நின்ற நிலை
51 கயத்திடை உய்த்திடினும் கல்நனையா தென்றும்
கயத்தில் கறிவேவா தற்றால் - இயற்றி
அறவுரை கேட்டிடத்துங் கல்லனையர்
திறவுரை தேறா தவர்
52 வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
மெய்கனன்றல் சாலயறிதாம் - அ·தேவை
கல்லும் நல்லறம் கேட்பினும் கீழ்கட்கு
பொல்லினும் வல்னெனும் நெஞ்சு
53 பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு தெண்ணீ ரமுதமாம் - ஒம்பற்கு
ஒளியாம் உயர்ந்தார்க்கண் ஞான மதுபோல்
களியாம் கடையாயார் மாட்டு
54 வேட்டவாக் கேட்பர் விரைந்தோடி ஞானத்தார்
கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால் - கோட்டில்லா
தோதுமின் ஓதியடங்குமின் என்னும் சொல்
கூதற்குக் கூதிர னைத்து
55 கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள்வள்ளி
உடம்பினும் கூட்டமதுவந்து கேட்பர் - அடங்கி
கொடுத்து உண்மின் கொண்டொழுக்கம் காணுமின்
அடுப்பேற்றி யாமைதீய்ந் தற்று
56 கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறனுணர்தல் - நல்லாய்
நறுநெய் நிறைபுழுக்கல் உய்ப்பினும் மூழை
பெறுமோ சுவையுணரு மாறு
57 கட்டளைக் கோடி திரியின் கருதிய
இட்டிகையும் கோடு மதுபோலு - மொட்டிய
காட்சி திரியின் அறந்திரியு மென்றுரைப்பர்
மாட்சியில் மிக்கவர் தாம்
58 அம்மைத் தான்செய்த அறத்தின் வருபயனை
இம்மைத் துய்த்தின்புறா நிற்பவர் - உம்மைக்கு
அறம் செய்யாதைம்பு லனுமாற்றுதல் நல்லாக்
கறந்துண்ட· தோம்பாமை யாம்
59 முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இற்பிறந்து இன்புறா நிற்பவர் - இப்பிறப்பே
இன்னுங் கருதுமேல் ஏதம்கடிந் தறத்தை
முன்னிமுயன் றொழுகற் பாற்று
60 இறந்த பிறப்பில் தாம்செய்த வினையைப்
பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து
செய்யும் வினையா லறிக யினிப்பிறந்
தெய்தும் வினைப் பயன்
61 போற்றிக் கருமம் பிழையாமல் செய்குறின்
பற்றின்கண் நில்லாதறம் செய்க - மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த வூர்நாடி
கன்றுடைத் தாய்போல் வரும்
62 தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
ஞானத்தில் மிக்க உசாத்துணையும் - மான
மழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉ மில்லை
பழியாமல் வாழும் திறம்
63 கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் - என்றும்
இடுக்க ணெனயுண்டோ யில்வாழ்க் கைக்குள்ளே
படுத்தானாம் தன்னை தவம்
64 ஒன்றாக நல்லதுயி ரோமபல் ஆங்கதன்பின்
நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்ட - லென்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நினறது வாயில் திறந்து
65 கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
கொடுக்கப் படுவ தருளே - யடுத்தடுத்து
உன்னப் படுவது நல்ஞானம் எப்பொழுது
மென்னப் படுவது வீடு
66 குறைக்கருமம் விட்டுரைப்பின் கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சேமாப் பில்லாதான் வாழ்க்கை நிரயத்து
துஞ்சாத் துயரம் தரும்
67 திரையவித்து நீராட லாகா உரைப்பர்
உரையவித் தொன்றும் சொல்லில்லை - அரைசராய்
செய்து மறமெனினு மாகாது உளவரையால்
நைதவர்க்கே யாகும் திரு
68 காலத்தே செய்வோமென் றறத்தைக் கடைப்பிடித்து
சாலச் செய்வாரே தலைப்படுவார் - மாலைக்
கிடந்தான் எழுத லரிதால் மற்றென்கொல்
அறங்காலை செய்யாத வாறு
69 மறந்தொருவன் வாழும் யிம்மாய மாவாழ்க்கை
அறிந்தொருவன் வாழுமேலில்லை - செறிந்தொருவன்
ஊற்றமிறந் துறுதிக் கொள்ளாக் கால்கொடிதே
கூற்றமிடைக் கொத்த நாள்
70 சென்ற நாளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
நின்றநாள் யார்க்கு முணர்வரிது - என்றொருவன்
நன்மை புரியாது நாளுலப்ப விட்டிருக்கும்
புன்மை பெரிது புறம்
71 உள்ளநாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ
இல்லைநாள் பேயென்று யிடம்கடிந்து - தொல்லை
இ¨டுக்கடையு மாற்றார் இறந்தார்க்கு நின்றார்
கடைத்தலை வைத்தீயும் புலி
72 பிச்சையும் ஐயமு மிட்டு பிறன்தார
எச்சிலும் நோக்காது போய்யொரீஇ - நிச்சலும்
கொல்லாமைக் காத்து கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை யென்னு மியல்பு
73 விருந்து புறந்தரான் வேளான்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்து§¡ய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமே
லில்வாழ்க்கை யென்பது யிருள்
74 கொடுத்துக் கொணர்ந்து அறஞ்செல்வம் கோடாது
விடுத்துத்தம் வீடழிதல் கண்டார் - கொடுப்பதன்கண்
ஆற்றமு டியாதெனி னும்தா மாற்றுவார்
மாற்றார் மறுமைகாண் பார்
75 உப்புக் குவட்டின்மிசை யிருந்துண்ணினும்
இட்டுண்ணும் கலத்தூ றாதாம் - தொக்க
உடம்பும் பொருளும் உடையான் ஓர்நன்மை
தொடங்காக்கால் என்ன பயன்
76 பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனு ளாற்றுவதொன்
றிற்றைநாள் ஈத்துண்டு யினிதொழுகல் - சற்று
மிதனில் யிலேசுடைக் காணோ மதனை
முதனின்று நிலைதெரியுங் கால்
77 செல்வததைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்
பற்கிளையும் வாடாமல் பார்த்துண்டு - நல்லாம்
தானம் மறவாத தன்மையரேல் அ·தென்பர்
வானகத்து வைப்பதோர் வைப்பு
78 இட்டக் கடைதரார் ஈண்டும் பலிமறீஇப்
பட்டம் வழங்காத பான்மையார் - நட்ட
சுரிகையாற் கானும் சுலாக்கோலாற் கானும்
சொரிப தாமாபோல் சுரந்து
79 நுறுங்கு பெய்தாக்கிய கூழார உண்டு
பிறங்கிருங் கோட்டொடன் றியும்வாழும் - அறம்செய்து
வாழ்வதே வாழ்க்கை மற்றெல்லாம் வெறும்
பேழைத் தாழ்கொளீஇ யற்று
80 கெடுப்பான் வினையல்லன் கொள்வானு மல்லன்
கொடுக்கப்படும் பொருளுமன்றால் - அடுத்தடுத்
தல்லவை யாதாம்கொல் நாடியுரை யாய்நீ
நல்லவர் நாப்பண் நயந்து
81 கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தின்
கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்தடுத்து
சென்றாங்க ணைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து
82 கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
வடுதீர்ந்தார் உண்ணின் பெறலாம் - கொடுத்தாரைக்
கொண்டுய்யப் போவார் குணமுடையார் அல்லாதார்
உண்டீத்து வீழ்வார் கிழக்கு
83 நீத்தாற்றி நின்ற நிலையினார் உண்டாக்கால்
ஈத்தாற் றினாரும் உய்ப்போவார் - நீத்தாற்றில்
பெற்றிப் புனைஅன்னார் போர்த்துண்ணா விட்டக்கால்
எற்றாம் உயப்போம் உலகு
84 அடங்கி அடங்கினார்க்கீ தல்தலையே அடங்காது
அடங்கினார்க்கு ஈதல் யிடையே - நுடங்கிடையாய்
எற்பானும் தானும் அடங்காக்கால் அ·தென்ப
தோற்பாவை கூத்தினுள் போர்
85 நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
நோற்பவர்க்குச் சார்வாய் அறம்பெருக்கி - தோற்புடைசூழ்
காழும் கடுகும் போல்நிற்கும் கயக்கினறி
ஆழிசூழ் வையகத்து அறம்
86 அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்னும்
அட்டுண்ணா மாட்சி யுடையவர் - அட்டுண்டு
வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்றுரைத்தல்
வீழ்வார்க்கு வீழ்வார் துணை
87 அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு
உறுநரைச் சார்ந்து உய்ப்போதல் - இறுவரைமேல்
கண்ணில் முடவன் துணையாக நீள்கானம்
கண்ணிலான் சென்ற து¡டத்து
88 வாழ்நா ளுடம்பு வலிவனப்பு செல்கதியும்
தாழ்மண் நிலை ஒழுக்கம் காட்சியும் - தாமாண்ட
உண்டி கொடுத்தான் கொடுத்தலால் ஊண்கொடையோடு
ஒன்றும் கொடையொப்ப தில்
89 மருவிய காதல் மனையாளும் தானும்
இருவரால் பூண்டீர்ப்பி னல்லால் - ஒருவரால்
இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வான்சகடம்
செல்லாது தெற்றிற்று நின்று
90 வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றால்
மனைவாழ்க்கை மிகநன்று தவத்தில் - புனைகோதை
மெல்லியல் நல்லாளும் நல்லள் விருந்தோம்பி
சொல்லெதிர் சொல்லா லெனின்
91 கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
கண்டது கண்டு விழையாமை - விண்டு
வெறுப்பன செய்யாமை வெ·காமை நீக்கி
உறுப்பெடு ணர்வுடையாள் பெண்
92 கொடுப்பதூஉம் மக்கள் பெறுவதூம் பெண்பால்
முடிப்பதூஉம் எல்லோரும் செய்வர் - படைத்ததனை
இட்டுண்டு இல்வாழ்க்கைப் புரிந்து நல்லறத்தை
நட்டாரே பெண்டி ரென்பர்
93 வனப்பொளி உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
முனியாது சொல்லிற்றுச் செய்தாங்கு - குனித்துரைய
தேற்றுப் பணியுமேல் இல்லாளை ஆண்மகனும்
போற்றிப் புனையும் புரிந்து
94 அயலுர் அவன்போக அம்மஞ்சளாடி
கயலேர் கண்ணார எழுதி - புயலம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளேர் தடங்கண்ணாள்
தண்டோசிப் பின்செல்லும் கூற்று
95 தலைமகனின் தீர்ந்துறைதல் தான்பிறனில் சேர்தல்
நிலைமையில தீப்பெண்டி ரோடூர்தல் - கலையறிந்து
வேற்றூர் புகுந்து விழாக்காண்டல் நோன்பிடுதல்
கோற்றொடியாள் கோளழியு மாறு
96 பிறர்க்கின்னா செய்தலின் பேதமை இல்லை
பிறர்க்கு இன்னாதென்று பேரிட்டு - தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற
97 தன்னை ஒருவன்யிகழ்ந் துரைப்பின் தானவனைப்
பின்னை உரையாப் பெருமையான் - முன்னை
வினைப்பயனும் ஆயிற்றா மென்றதன்கண் மெய்ம்மை
நினைத்தொழிய நெஞ்சில்நோய் யில்
98 தம்புண் கழுவி மருந்திடுவார் தாம்பிறிதின்
செம்புண் ணறுத்த வாறிதென்பர் - அந்தோ
நடுநின் றுலக நயனிலா மாந்தர்
வடுவன்றோ செய்யும் வழக்கு
99 ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயன்
வெறுப்பார்க்கும் நானடங் கேனென்பர் - ஒறுத்தியேல்
ஆர்வ மயக்க குரோத மிவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ணொறு
100 ஒறுக்கிலேன் ஊர்பகை என்கண் பிறரை
ஒறுக்கிற்பே னென்றுரைப் பையாகின் - கறுத்தெறிந்த
கற்கறித்து கற்கொண்டு எறிந்தாரைக் காய்கல்லா
பற்கழல் நாயன்ன துடைத்து
101 கட்டெனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடியாக்கும் குரோதத்தை - வெட்டெனக்
காய்த்துவரக் கண்டக்கால் காக்கும் திறலாரே
மாய்க்கும் முடிவெய்து வார்
102 எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
கொள்ளி வைத்தாற்போல் கொடிதெனினும் - மெள்ள
அறிவென்னும் நீரால் அவித்தொழுக லாற்றின்
பிறிதெனினும் வேண்டா தவம்
103 உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண
இழந்திழந்து எங்கணும் தோன்ற - கழன்றுழர்ந்து
சுற்றத்தார் அல்லாதார் இல்லையேல் நன்நெஞ்சே
செற்றத்தால் செய்வ துரை
104 பட்டார்ப் படுத்து படாதார்க்கு வான் செறித்து
விட்டொழிவ தல்லால் யவ்வெங்கூற்றம் - ஒட்டிக்
கலாங் கொடுமை செய்யாது கண்டது பார்த்துண்டல்
புலாற்குடி லாலாய பயன்
105 ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
பூசிப் பொதிந்த புலால் உடம்பு - ஊசல்
கயிறற்றால் போலக் கிடக்குமே கூற்றத்து
எயிறுற்றிடை முரித்தக் கால்
106 மூப்பொட தீப்பிணி முன்னுறீஇ பின்வந்து
கூற்றரசன் குறும் பெறியும் - ஆற்ற
அறஅரண மாராய்ந்து அடையி ன·தல்லால்
பிறவரண மில்லை உயிர்க்கு
107 மின்னு மிளமை உளதா மெனமகிழ்ந்து
பின்னை அறிகு என்றல் பேதைமை - தன்னைத்
துணித்தாலும் தூஙகா தறம் செய்க கூற்றம்
அணித்தாய் வருதலு முண்டு
108 திருத்தப்படுவ தறம் கருமம் தம்மை
வருத்தியும் மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங் கூற்றம் வன்கண் ஞமன்கீழ்
தரவறுத்து மீளாமை கண்டு
109 பாவம் பெருக பழிபெருக தன்ஓம்பி
ஆவதொன் றில்லை அறனொழித்து - பாவம்
பெறாஅ முறைசெய் பொருளில் ஞமன்கீழ்
அறாஉண்ணும் ஆற்றவும் நின்று
110 கோட்டுநா ளிட்டுக் குறையணர்ந்து வாராதால்
மீட்டொருநாள் யிடையும் தாராதால் - வீட்டுதற்கே
வஞ்சம்செய் கூற்றம் வருதலால் நன்றாற்றி
அஞ்சாது அமைந்திருகப் பாற்று
111 உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்றுண்ணும் வாழ்க்கை
செயிர் வித்திச் சீலம் தின்றென்னை - செயிரினை
மாற்றி மறுமை புரிகிற்பின் காணலாம்
கூற்றம் குறுகா யிடம்
112 இன்றுளார் இன்றேயு மாய்வர் அவருடைமை
பிறர் யுடைமையாய் யிருக்கும் - நின்ற
கருமத்தர் அல்லாத கூற்றின்கீழ் வாழ்வார்
தருமம் தலைநிற்றல் நன்று
113 இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக
வன்சொல்களை கட்டுவாய்மை யெருவாட்டி - அன்புநீர்
பாய்ச்சி அறக்கதிர் ஈன்ற தோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்
114 தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
பிரிவும் துயிலும் ஒரீஇ - பருவத்து
பத்து எட்டு நாளைப் பயன் இலா வாழ்க்கைக்கு
வித்துக்குற்று உண்பார் பலர்
115 முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
என்னே ஒருவன் இகழ்திருத்தல் - முன்னே
முடித்தபடி அறிந்து முன் முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து
116 பெண் விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தண் விழைவார்க்கு இல்லை தவம்
117 ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
பெருவாழ்க்கை முத்தாடை கொண்ட - திருவாளா
வீழ்நாள் படாமை நீ துண்ணம் பொய்யே ஆக
வாழ்நாள் படுவது அறி
118 எண்ணற்குரிய இடையூறு உடையதனைக்
கண்ணினால் கண்டு கருதாதே - புண்ணின்மேல்
வீக்கருவி பாய இருந்தற்றால் மற்று அதன்கண்
தீக்கருமம் சோர விடல்
119 அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
அங்கே ஒருவண்ணம் கோடலால் என்றும்
அரங்காடு கூத்தனே போலும் உயிர்தான்
கழங்காடு தோற்றப் பிறப்பு
120 புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்கண்
தவா வினை வந்து அடையக் கண்டும் - அவாவினைப்
பற்றுச் செய்து என்னை பயம இன்றால் நன்நேஞ்சே
ஒற்றி உடம்பு ஓம்புதற்கு
121 எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப்
புக்கில் நிறையத் தருகிலேன் - மிக்க
அறிவனை வாழ்த்தி அடவி துணையாத்
துறத்தல்மேல் சார்தல் தலை
122 சோரப் பசிக்குமேல் சேற்று ஊர்திப் பாகன்
ஈரப்படினும் அது ஊரான் - ஆரக்
கொடுத்துக் குறை கொள்ளல் வேண்டும் அதனால்
முடிக்கும் கருமம் பல
123 புகாப் பெருக ஊட்டின் புலனங்கள் மிக்கு ஊறி
அவாப் பெருகி அற்றம் தருமால் - புகாவும்
ஓர பெற்றியான் ஊட்டி பெரும் பயன் கொள்வதே
கற்று அறிந்த மாந்தர் கடன்
124 கற்றதுவும் மற்று ஒருபால் நிற்ப கடைப்பிடியும்
மற்று ஒருபால் போக மறித்திட்டு - தெற்றென
நெஞ்சத்துள் தீமை எழுதருமேல் இன்னாதே
கஞ்சத்துள் கல்பட்டாற் போன்று
125 நல்வினைப்பின் அல்லால் நறுந் தாமரையாளும்
செல்லாள் சிறந்தார் பின் ஆயினும் - நல்வினைதான்
ஓத்தும் ஒழுக்கமும் தானமும் உள்வழி
நீத்தல் ஒருபொருதும் இல்
126 சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
ஏறு யாரும் வைத்து ஏறாரோ - தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு
127 தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல்
அறிவிற்கு அறிவு ஆவது எண்ணின் மறு பிறப்பு
மற்று ஈண்டு வாரா நெறி
128 தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
மாசு மனத்தகத்து இல்லாமை - ஆசு இன்றிக்
கற்றல் கடன் அறிதல் கற்றார் இனத்தராய்
நிற்றல் வரைத்தே நெறி
129 குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி
செற்றம் முதலா உடையாரை - தெற்ற
அறிந்தார் என்று ஏத்துமவர்களைக் கண்டால்
துறந்து எழுவர் தூய்க் காட்சியார்
130 ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு
தோழன்மார் ஐவாராம் வீண் கீளைஞர் - தோழர்
வெறுப்பனவும் உண்டு எழுந்து போனக்கால் ஆதன்
இருக்குமாம் உண்ட கடன்
131 உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
இடம் கொண்டு சில் நாள் இருப்பர் - இடம் கொண்ட
இல்லத்து இருவர் ஒழிய ஒருவனே
செல்லும் அவன் பின் சிறந்து
132 நல் ஞானம் நற்காட்சி நல் ஒழுக்கம் என்று இவை
தன்னால் முடித்தல் தான் இல்லையேல் - பொன்னே போல்
ஆவட்டம் செய்த அணிகலம் தேய் அகிற் போல்
ஆவட்டம் நில்லாது உடம்பு
133 பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இன் நான்கும்
மறப்பர் மதியிலா மாந்தர் - குறை கூடாச்
செல்வம் கிளை பொருள் காமம் என்று இன் நான்கு
பொல்லாப் பொறி அறுக்கப் பட்டு
134 மூப்பு பிணியே த¨ல்ப்பிரிவு நல்குரவு
சாக்காடும் எல்லாம் சலம் இலவாய் - நோக்கீர்
பருந்துக்கு இறை ஆம இவ் யாக்கையைப் பெற்றால்
மருந்து மறப்பதோ மாண்பு
135 நீக் அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு
சாக்காடு என்று ஐந்து களிறு உழக்க - போக்க அரிய
துன்பத்துள் துன்பம் உழப்பர் துறந்து எய்தும்
இன்பத்து இயல்பு அறியாதார்
136 வாழ்நாளில் பாகம் துயில் நீங்கி மற்றவற்றுள்
வீழ்நாள் இடர் மூப்பு மெய் கொள்ளும் - வாழ்நாளுள்
பல் நோய் பரிந்து கவற்ற பரிந்து குறை என்னை
அன்னோ அளித்து இவ் உலகு
137 ஒழுக்கம் இலன் ஆக ஓத்துடையனேனும்
புழுப்பொதிந்த புண்ணில் கொடிது ஆம் - கழுக்கு இரையை
ஓம்பி மற்று என்னை உறுதிகஙகண் நில்லாக்கால்
தேம்பி விடுதலே நன்று
138 நல்வினை நாற்கால் விலங்கு நவை செய்யும்
கொல்வினை அஞ்சி குயக்கலம் - நல்ல
உறுதியும் அல்லசூ,ம் நாட் பேர் மரப்பேர்
இறுதியில் இன்ப நெறி
139 பறவை அரும்பொருள் இன்சோல் முதிரை
உறுதிக்கண் உண் விலங்கு - சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்து ஈண்டு வாரா நெறி
140 உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே
நட்கப்படும் எழுத்தும் அத்துணையே - ஒட்டி
இழுக்கா எழுத்து ஒன்று இமிழ் கடல் தண் சேர்ப்ப
விழுச் சார்பு வேண்டுபவர்க்கு
141 முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத்
தப்பிய பின்றைத் தம் பேர் ஒழத்து - அப்பால்
பெறு பெயரைக் காயப் பெறுபவேல் வையத்து
உறும் அவனை எல்லாம் ஒருங்கு
142 அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால் பொருள் வளரும் நாளும் - தெருளா
விழைவு இன்பத்தால் வளரும் காமம் அக்காமம்
விழைவு இன்மையால் வளரும் வீடு
143 எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு
மக்கட் பிறப்பின் பிரிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்
144 தாய் தந்தை மக்கள் உடன் பிறந்தார் சுற்றத்தார்
ஆய் வந்து தோன்றி அருவினையால் - மாய்வதன் கண்
மேலைப் பிறப்பும் இது ஆனால் மற்று என்னை
கூலிக்கு அழுத குறை
145 உடம்பும் பொருளும் கிளையும் பிறவும்
தொடர்ந்து பின் செல்லாமை கண்டும் - அடங்கித்
தவத்தொடு தானம் புரியாது வாழ்வார்
அவத்தின் கழிகின்ற நாள்
146 ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
தெளிவு உடையார் என்று உரைக்கும் தேசும் - களி என்னும்
கட்டுரையால் கோதப் படுமேல் இவை எல்லாம்
விட்டு ஒழியும் வேறாய் விரைந்து
147 இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
கை விளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன் நெஞ்சத்து அருளுடைமை நெய் பயந்த
பால் போல் ஒழுக்கத்தவரே பரிவு இல்லா
மேல் உலகம் எய்துபவர்
148 ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர் - மூட்டும்
எரியின் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட
தெரியின் அறமே துணை
149 ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
மேதை எனப்படும் மேன்மையும் - சூது
பொரும் என்னும் சொல்லினால் புலப்படுமேல்
இருளாம் ஒருங்§ இவை
150 அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
தறன் உடையன் என்று யரைக்கும் தேகம் - பிறன் இல்
பிழைத்தான் எனப் பிறரால் பேசப் படுமேல்
இழுக்கு ஆம் ஒருங்கே இவை
151 கல்லான் கடை சிதயும் காமுகன் கண் காணான்
புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் - நல்லான்
இடுக்கணும் இன்பமும் எய்தியக்கண்ணும்
நடுக்கமும் நல் மகிழ்வும் இல்
152 குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குஙகால் நின்றுழியே மாய்வர் - வினைப் பயன்கொல்
கல்லார் குலம் இல்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார் பின் சென்ற தலை
153 பொய் மேல் கிடவாத நாவும் புறன் உரையைத்
தன் மேல் படாமல் தவிரப்பானும் - மெய்ம்மேல்
பிணிப் பண்பு அறியாமை பெற்ற பொழுதே
தணிக்கும் மருந்து தலை
154 தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
ஆய பொழுது ஆற்றும் ஆற்றலும் - காய்விடத்து
வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம் மூன்றும்
சாற்றுங்கால் சாலத் தலை
155 கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
பழியொடு பாவம் படாமை - ஒழுகினார்
உய்க்கும் பொறியாரை நாடி உழிதருமே
துய்க்கும் பொருளெல்லாம் தொக்கு
156
ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாது ஒன்றும்
தேற்றான் எனப்பட்டு வாழ்தலின் - மாற்றி
மனையின் அகன்று போய் மா பொருங் காட்டில்
நனை இல் உடம்பு விடுதல் நன்று
157
பற்றொடு செற்றம் பயம் இன்றி பல் பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன - கற்றும்
கடையாய் செய்து ஒழுகும் கார் அறிவினாரை
அடையார் அறிவுடையார்
158
தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
உணற்கு விரும்பு குடரை - வனப்புற
ஆம்பல் தாள் வாடலே போல அகத்து அடக்கி
தேம்பத் தாம் கொள்வது அறிவு
159
ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
இருநா¨ளுக்கு ஈந்தாலும் ஏலாய் - திருவாளா
உன்னோடு உறுதி பெரிது எனினும் இவ் உடம்பே
நின்னொடு வாழ்தல் அரிது
160
தனக்குத் துணை ஆகி தன்னை விளக்கி
இனத்துள் இறைமையும் செய்து - மனக்கு இனிய
போகம் தருதலால் பொன்னே அறத்துணையோடு
ஏகம் ஆம் நண்பு ஒன்றும் இல்
161
நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு எம்பி - அல்லாத
பொய் சுற்றத்தாரும் பொருளோ பொருள் ஆய
இச் சுற்றத்தாரில எனக்கு
162
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
ஒக்க உடன் பிறந்தார் என்றிவர்கள் - மிக்க
கடும் பகையாக உழலும் உயிர்தான்
நெடுந் தடுமாற்றத்துள் நின்று
163
விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீங்கி
கதிப்பட்ட நூலினைக் கையிகந்து ஆக்கி
பதிப்பட்டு வாழ்வார் பழி ஆய செய்தல்
மதிப் புறத்தில் பட்ட மறு
164
போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
தோற்றியார்கண் எலாம் தொண்டே போல் - ஆற்றப்
பயிற்றிப் பயிற்றிப் பல உரைப்பது எல்லாம்
வயிற்றுப் பெருமான் பொருட்டு
165
தண் காமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப - பண்பாளா
ஈதல் அறிதல் இயற்றுதல் இன்சொல் கற்று
ஆய்தல் அறிவார் தொழில்
166
இக் காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால்
பொச்சாவாப் போற்றித் தாம் நோற்பாரை - மெச்சாது
அலந்து தம் வாய் வந்த கூறுமவரின்
வில்ங்குகள் நல்ல மிக
167
ஆர்வமும் செற்றமும் நீங்கி அடங்குதல்
சீர் பெறு வீட்டு நெறி என்ப - நீர் புகப்
பட்டினம் புக்கான் அடங்கினான் என்பது
கெட்டார் வழி வியக்குமாறு
168
அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்
ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்
கூட்டும் திறம் இன்மையால்
169
இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
முறையின் நரம்பு எங்கும் யாத்து - நிறைய
அவாப் பெய்த பண்டியை ஊர்கின்ற பாகன்
புகாச் சுருக்கின் பூட்டா விடும்
170
உணர்ச்சி அச்சு ஆக உசா வண்டி ஆக
புணர்ச்சிப் புலன் ஐந்தும் பூட்டி - உணர்ந்ததனை
ஊர்கின்ற பாகன் உணர்வுடையன் ஆகுமேல்
பேர்கின்றது ஆகும் பிறப்பு
171
பேறு இழவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
ஆறு உள அந்நாள் அமைந்தன - தேறி
அவை அவை வந்தால் அழுங்காது விம்மாது
இவை இவை எஎன்று உணரற்பாற்று
172
தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன்னைப்
பின்னை மனம் அறப் பெற்றானேல் - என்னை
எழுத்து எண்ணே நோக்கி இருமையும் கண்டு ஆங்கு
அருட் கண்ணே நிற்பது அறிவு
173
தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
ஒன்றானும் தான் நெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச் செய்வானும் தானே தான் தன்னைச்
சிறுவனா செய்வானும் தான்
174
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்த்தலால்
தானே தனக்கு கரி
175
தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
கூற்றங் கொள்ளுங்கால் சம்பிரதம் - தோற்றம்
கடைபட்டவாறு அறிந்து கற்று அறிந்தார் துஞ்சார்
படைப்பட் நாயகனே போன்று
176
தடுமாற்றம் அஞ்சிய தம்மை உடையார்
விடு மாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார் - தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார் தம் ஐம்புலனும்
ஆரும்வகை யாதாம் கொல் என்று
177
மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை
திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன
அறம் பத்தும் ஆன்ற குணம்
178
அளற்றகத்து தாமரை ஆய்மலர் ஈன்றாங்கு
அளற்று உடம்பு ஆம் எனினும் நன்று ஆம் - அளற்று உடம்பின்
நன்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் என்று இவை
தன்னால தலைப்படுதலான்
179
உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி
செயிரும் சினமும் கடிந்து - பயிரிடைப்
புல் களைந்து நெல் பயன் கொள்ளும் ஒருவன் போல்
நற் பயன் இருக்கற் பாற்று
180
தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு
ஆற்ற நலிவர் ஒரு நால்வர் - ஆற்றவும்
நல்லார் போல் ஐவர் பகை வளர்ப்பர் மூவரால்
செல்லும் அவன் ஒ¢ன் சிறந்து
181
செய்வினை அல்லால் சிறந்தார் பிறிது இல்லை
பொய்வினை மற்றைப் பொருள் எல்லாம் - மெய் வினவில்
தாய் ஆர் மனைவி ஆர் தந்தை ஆர் மககள் ஆர்
நீயார் நினை வாழி நெஞ்சே
182
புலங்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
சலங்களை சால ஒழுகல் - புலங்கள்
ஒறுக்கும் பருவத்து உசாத்துணையும் ஆகா
வெறுத்து நீ உண்டல் கடன்
183
பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே - சிறந்த
ஒழுக்கத்தோடு ஒன்றி உயப் போதி அன்றே
புழுக்கூட்டு பொச்சாப்பு உடைத்து
184
முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட
கடைமுறை வாய் போதரக் கண்டும் - தடுமாற்றில்
சாவாப் பிறவா இச் சம்பிரத வாழ்க்கைக்கு
மேவாதாம் மெய் கண்டார் நெஞ்சு
185
அற்ற பொழுதே அறம் நீனைத்தி யாது ஒன்றும்
பெற்ற பொழுதே பிற நினைத்தி - எற்றே
நிலை இலா நெஞ்சமே நின்னோடு வாழ்க்கை
பூலை மயங்கி அன்னது உடைத்து
186
முன்செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
பின் செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறம் மறவேல் நன்நெஞ்சே
கூற்றம் குடில் பிரியா முன்
187
பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நனநெஞ்சே
அரிந்து என்னை ஆற்றவும் தின்னல் - புரிந்து நீ
வேண்டுவ வேண்டுவேன் அல்லேன் விழுக்குணம்
பூண்டேன் பொறி இலி போ
188
சாவாய் நீ நெஞ்சே சல்லிய என்னை நீ
ஆவதன்கண் ஒன்றானும் நிற்க ஒட்டாய் - ஓவாதே
கட்டு அழித்து காமக் கடற்கு என்னை ஈர்ப்பாயோ
விட்டு எழுங்கால் என ஆவாய் சொல்
189
பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றி
கழிபெருங் காம நோய் வாங்கி - வழிப்படாது
ஓடும் மன்னே விடுத்து என்னை விரைந்து நீ
நாடிக் கொள் மற்றோர் இடம்
190
அஞ்சினாய் ஏனும் அடைவது அடையும் காண்
துஞ்சினாய் என்று வினைவிடா - நெஞ்சே
அழுதாய் எனக்கருதிக் கூற்று ஒழியாது ஆற்றத்
தொழுதேன் நிறை உடையாய் ஆகு
191
புழுப்போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும்
அழுக்கு உடம்பு தன்னுள் வளர்த்தாய் - விழுந்து உமிழ்ந்து
இன்ன நடையாய் இறக்கும் வகையிலை
நன்நெஞ்சே நாடாய்காண் நற்கு
192
நின்னை அறப் பொருக்கிலேன் நல்நெஞ்சே
பின்னை யாரை நான் பொறுக்கிற்பேன் - நின்னை
அறப் பொற்கிப்பேனேல் பெற்றேன் மற்று ஈண்டே
துறக்கம் திறப்பது ஓர் தாழ்
193
இந்திரக் குஞ்சரத்தை ஞான இருங் கயிற்றால்
சிந்தனைத் தூண் பூட்டிச் சேர்த்தியே - பந்திப்பார்
இம்மைப் புகழும் இனிச் செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப் படுத்துவார்
194
ஆர்வு இல் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால்
தீர்வு இல் நிகோதாதி சேர்விக்கும் தீர்வு இல்
பழி இன்மை எய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலும் உண்டு
195
புண் ஆகப் போழ்ந்து புலால் வழியப் தாம் வளர்ந்து
வண்ணப் பூண் பெய்வ செவி அல்ல - நுண்நூல்
அறவுரை கேட்டு உணர்ந்து அஞ்ஞானம் நீக்கி
மற உரை விட்ட செவி
196
பண்அமை யாழ் குழல் கீதம் என்று இன்னலை
நண்ணி நயப்ப செவி அல்ல - திண்ணிதின்
வெட்டெனச் சொல் நீக்கி விண் இன்பம் வீட்டோடு
கட்டுரை கேட்ப செவி
197
கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
குண்டலம் பெய்வ செவி அல்ல - கொண்டு உலகில்
மூன்றும் உணர்ந்து அவற்றின் முன்னது முட்டு இன்றிச்
சூன்று சுவைப்ப செவி
198
பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன்மணி போன்று எங்கும்
இருள் அறக் காண்பன கண் அல்ல - மருள் அறப்
பொய்க்காட்சி நீக்கி பொருஅறு முக்குடையான்
நற்காட்சி காண்பன கண்
199
சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
மோந்து இன்பறுவன மூக்கு அல்ல - ஏந்து இன்
அலங்கு சிங்காதனத்தின் அண்ணல் அடிக்கீழ்
இலங்கு இதழ் மோப்பது ஆம் மூக்கு
200
கைப்பன கார்ப்ப்பு துவர்ப்பு புளி மதுரம்
உப்பு ரதம் கொள்வன நா அல்ல - தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு உவந்து எப்பொழுதும்
நின்று துதிப்பது ஆம் நா
201
சொல்வதூஉம் கள்வதூஉம் இன்றி பிறர் மனையில்
செல்வதூஉம் செய்வன கால் அல்ல - தொல்லைப்
பிறவி தணிக்கும் பெருந்தவர்பால் சென்று
அறவுரையைக் கேட்பிப்ப கால்
202
குற்றம் குறைத்து குறைவின்றி மூஉலகின்
அற்றம் மறைத்து ஆங்கு அருள் பரப்பி - முற்ற
உணர்ந்தானை பாடாத நா அல்ல அல்ல
சிறந்தான் தாள் சேராத் தலை
203
அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர் - பிறன் தாரத்து
அற்றத்தை நோக்காத கண் என்ப யார் மாட்டும்
செற்றத்தைத் தீர்த்ததாம் நெஞ்சு
204
உள்ளப் பெருங் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி
கள்ளப் புலன் ஐந்தும் காப்பு அமைத்து - வெள்ளப்
பிறவிக்கண் நீத்தார் பெருங்குணத்தாரைத்
துறவித்துணை பெற்றக்கால்
205
வெம்மை உடையது அடிசில் விழுப்பொருட்கண்
செம்மை உடையதாம் சேவகம் - தம்மைப்
பிறர் கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
உற வருவது ஓர்வதாம் ஓர்ப்பு
206
அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கி
பொறி ஐந்தும் வெல்லும் வாய் போற்றி - செறிவினால்
மன் உயிர் ஓம்பும் தகைத்தேகாண் நன்ஞானம்
தன்னை உயர் கொள்வது
207
ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற
இருகால் நெடுங்குரம்பை வீழின் - தரு காலால்
பேர்த்து ஊன்றலாகாப் பெருந்துன்பம் கண்டாலும்
ஓர்த்து ஊன்றி நில்லாது உலகு
208
தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின்
பின்னைத் தான் எய்தா நலன் இல்லை - தன்னைக்
குடி கெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்
பிடி படுக்கப்பட்ட களிறு
209
நெடுந்தூண் இருகாலா நீள் முதுகு தண்டா
கொடுங்கால் விலா எலும்பு கோலி - உடங்கு இயன்ற
புன் தொலால் வேய்ந்த புலால் வாய்க் குரம்பையை
இன்புறுவர் ஏழையவர்
210
என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
ஒன்பது வாயிலும் ஊற்று அறாத் - துன்பக்
குரம்பை உடையார் குடிபோக்கு நோக்கி
கவர்ந்து உண்ணப் போந்த கழுகு
211
வயிறு நிறைக்கு மேல் வாயின் மிகக் கூறிச்
செயிரிடைப் பாடு எய்துமாம் சிவன் - வயிறும் ஓர்
பேற்றியால் ஆர்த்தி பெரும் பயன் கொள்வதே
கற்று அறிந்த மாந்தர் கடன்
212
மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு
குப்பைத்தே குண்டுநீர் வையகம் - மக்கள்
அளக்கும் கருவி மற்று ஒண் பொருள் ஒன்றோ
துளக்கு அறு வெள்வளையார் தோள்
213
மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின்
மக்கள் அறிவும் அறிவு அரிது - மக்கள்
அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார்
நெறிதலை நின்று ஒழுகுவார்
214
நம்மைப் பிறர் சொல்லும் சொல் இலை நாம் பிறரை
எண்ணாது சொல்லும் இழுக்கு இல்லை - என்று எண்ணி
உரைகள் பரியாது உரைப்பாரில் யரே
களைகணது இல்லாதவர்
215
அலைபுனலும் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர் நிலாதாகும் - அலைவின்
புலன்களில் நிறபினும் பொச்சாப்பு இலரே
மனம் கடிவு ஆகளாதவர்க்கு
216
உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்
கள் அவிழ் சோலை ஆம் காட்டு உளார் - காட்டுள்ளும்
உள்ளம் அறப் பெறுகல்லாரேல் நாட்டுள்ளும்
நள்ளி நடு ஊர் உளார்
217
உயிர் திகிரி ஆக உடம்பு மண் ஆக
செயிர் கொள் வினை குயவன் ஆக - செயிர்தீரா
எண்ண அரு நல யாக்கைக் கலம் வனையும் மற்று அதனுள்
எண்ண அரு நோய் துன்பம் அவர்க்கு
218
அருவினையும் ஆற்றும் அரும் பயனும் ஆக்கும்
இருவினையும் நின்று விளையும் - திரிவு இன்றிக்
கண்டு உணர்ந்தார்க்கு அல்லது காட்டதரும் நாட்டதரும்
கொண்டு உரைப்பான் நிற்றல் குதர்
219
நார்இல் இறகில் கண் இலது எனினும் நன் பொருளின்
பேர் இறையான் நுண் பெயரின் பின் சிறக்கும் - ஓர் இரண்டு
இறகிற்கண் உள்ளது எனினும் அதனை
வெருண்டு விலங்காமல் கா
220
நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே
வாய்த்து அமைத்த வாயில் பெண் ஆனையும் - கூத்தற்கு
வாள் ஏறோடு ஓசை விளைநிலம் இவ் அல்லால்
கேள் ஆய் உடன் வருவது இல்
221
பரப்பு நீர் வையகத்து பல் உயிர் கட்கு எல்லாம்
இரப்பாரின் வள்ளல்களும் இல்லை - இரப்பவர்
இம்மைப் புகழும் இனிச்செல் கதிப் பயனும்
தம்மைத் தலைப் படுத்தலால்
222
ஈவாரின் இல்லை உலோபர் உலகத்துள்
யாவரும் கொள்ளாத ஆறு எண்ணி - மேவ அரிய
மற்று உடம்பு கொள்ளும் பொழுது ஓர்ந்து தம் உடைமை
பற்று விடுதல் இலர்
223
ஆதியின் தொல் சீர் அறநெறிச் சாரத்தை
ஓதியும் கேட்டும்உணர்ந்தார்க்குச் - சோதி
பெருகிய உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து
கருதியவை கூடல் எளிது
224
எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
பொய்நூல் அவற்றின் பொருள் தெர்¢ந்து - மெய்ந்நூல்
அறநெறிச்சாரம் அறிந்தான் வீடு எய்தும்
திற நெறிச்சாரம் தெளிந்து
225
அவன்கொல் இவன் கொல் என்று ஐயப் படாதே
சிவன் கண்ணே செய்மின்கள் சிந்தை - சிவன் தானும்
நின்று கால் சீக்கும் நிழல் திகழும் பிண்டிக் கீழ்
வென்ற சீர் முக்குடையான் வேந்து
226
முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்
தனைப்பாடி வந்தோர்க்குத் தந்த பரிசில்
வினைப்படு கட்டழித்து வீட்டு இன்பம் நல்கி
நினைப்பாடி வந்தோர்க்கு நீம் ஈக என்றான்
நிறை விளக்குப் போல இருந்து
அறநெறிச்சாரம் முற்றும்
விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை
கடவுள் வாழ்த்து
மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். 1
நூல்
படியை மடியகத் திட்டான் அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆப்பனி தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன். 2
எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து. 3
பறைபட வாழா அசுணமா உள்ளங்
குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து
நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்
சொற்பட வாழாதாஞ் சால்பு. 4
மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன். 5
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
நல்லாள் பிறக்குங் குடி. 6
கல்லிற் பிறக்குங் கதிர்மணி காதலி
சொல்லிற் பிறக்கும் உயர்மதம் - மெல்லென்று
அருளிற் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளிற் பிறந்து விடும். 7
திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்
கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் மன்னர்ச் செலவு. 8
கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு
உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். 9
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்று
உற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும். 10
நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணியென்ப நாணம் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம். 11
கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர
மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி
இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை
நயத்திற் பிணித்து விடல். 12
கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்
விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்
ஆக்கும் சிதைக்கும் வினை. 13
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாம் கொல்களிறு
கோட்டால் நோய்செய்யும் குறித்தாரை ஊடி
முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர்
தவத்தால் தருகுவர் நோய். 14
பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்ற
பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து
ஆர்தலின்நன்று பசித்தல் பசைந்தாரின்
தீர்தலின் தீப்புகுதல் நன்று. 15
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து. 16
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். 17
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும். 18
பொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்
மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்
தகுதி இறுவாய்த்து உயிர். 19
மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்
நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்
கேளிர் ஒரீஇ விடல். 20
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய
மண்ணதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்ணதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும். 21
மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை தான்செல்லும்
திசைக்குப்பாழ் நட்டோ ரை இன்மை இருந்த
அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ்
கற்றறிவு இல்லா உடம்பு. 22
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின். 23
புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்
பேணாது செய்வது பேதைமை - காணாக்
குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்த
கண்ணாரச் செய்வது கற்பு. 24
மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்
அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்
நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்
உடனுறையும் காலமும் இல். 25
நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த
அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட
தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம்
உள்ளானால் உள்ளப் படும். 26
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த
எஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்
கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதி
நட்டார்கண் விட்ட வினை. 27
அலைப்பான் பிறவுயிரை யாக்கலும் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். 28
கோல்நோக்கி வாழும் குடியெல்லாம் தாய்முலைப்
பால்நோக்கி வாழும் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. 29
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணரும் கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ - உப்பால்
உயர்ந்த உலகம் புகும். 30
குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச்
செறிவுழி நிற்பது காமம் தனக்கொன்று
உறுவுழி நிற்பது அறிவு. 31
திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல். 32
புகைவித்தாப் பொங்கழல் தோன்றும் சிறந்த
நகைவித்தாத் தோன்றும் உவகை - பகையொருவன்
முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின்
இன்னாவித் தாகி விடும். 33
பிணியன்னர் பின்நோக்காப் பெண்டிர் உலகிற்கு
அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின்
புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் கல்லன்னர்
வல்லென்ற நெஞ்சத் தவர். 34
அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும்
தாயின் சிறந்த தமரில்லை யாதும்
வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின்
இளமையோ டொப்பதூஉம் இல். 35
இரும்பின் இரும்பிடை போழ்ப பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப பெரிய
பெரியரான் எய்தப் படும். 36
மறக்களி மன்னர்முன் தோன்றும் சிறந்த
அறக்களி இல்லாதார்க்கு ஈயமுன் தோன்றும்
வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாம் கயக்களி
ஊரில் பிளிற்றி விடும். 37
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள்
நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்ய
முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார்
வழங்கத் தளிர்க்குமாம் மேல். 38
நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின்
தொகைஇனிது தொட்டு வழங்கின் - வகையுடைப்
பெண்இனிது பேணி வழிபடின் பண்இனிது
பாடல் உணர்வார் அகத்து. 39
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும்
இரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் பரப்பமைந்த
தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல்
செய்யாமை செல்சா ருயிர்க்கு. 40
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக்
கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார்
முன்னிய செய்யுந் திரு. 41
திருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்
கூற்றமுங் கூறுவ செய்துண்ணாது - ஆற்ற
மறைக்க மறையாதாங் காமம் முறையும்
இறைவகையான் நின்று விடும். 42
பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்
நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்
உடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்
கண்டனவும் காணாக் கெடும். 43
போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த
வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய்
மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி
மன்னர்சீர் வாடி விடும். 44
ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும்
காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க
தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள்
முந்துதான் செய்த வினை. 45
பொறிகெடும் நாணற்ற போழ்தே நெறிபட்ட
ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா
நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் நலம்மாறின்
நண்பினார் நண்பு கெடும். 46
நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் சென்ற
விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர் ஊடல்சாம்
ஊடல் உணரா ரகத்து. 47
நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில். 48
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும்
தவமிலார் இல்வழி இல்லை தவமும்
அரச னிலாவழி இல்லை அரசனும்
இல்வாழ்வார் இல்வழி யில். 49
போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்
தாதினான் நந்துஞ் கரும்பெல்லாந் - தீதில்
வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம்
நனையினான் நந்தும் நறா. 50
சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும்
பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல்
வரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன்
றில்லென்றல் யார்க்கும் அரிது. 51
இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால்
உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா
முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந்
தன்னடைந்த சேனை சுடும். 52
எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை
உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து
சேர்தற் பொருள தறநெறி பன்னூலும்
தேர்தற் பொருள பொருள். 53
யாறுள் அடங்கும் குளமுள வீறுசால்
மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின்
வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை
வேள்வியோ டொப்ப உள. 54
எருதுடையான் வேளாளன்; ஏலாதான் பார்ப்பான்;
ஒருதொடையான் வெல்வது கோழி - உருபோடு
அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப சேனைச்
செறிவுடையான் சேனா பதி. 55
யானை யுடையார் கதன்உவப்பர் மன்னர்
கடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை
நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை
அல்லார் உவப்பது கேடு. 56
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ
டெண்ணக் கடவுளு மில். 57
கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார்
செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென
உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும்
புற்றன்னர் புல்லறிவி னார். 58
மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர்
துறப்பார் துறக்கத் தவர். 59
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர். 60
இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான்
முனிதக்கா னென்பான் முகன்ஒழிந்து வாழ்வான்
தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான்
இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும்
முனியா ஒழுக்கத் தவன். 61
ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்
கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற
நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்
பாடறியா தானை இரவு. 62
நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து
வழுத்த வரங்கொடுப்பர் நாகர் - தொழுத்திறந்து
கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி
நன்றூட்ட நந்தும் விருந்து. 63
பழியின்மை மக்களால் காண்க வொருவன்
கெழியின்மை கேட்டா லறிக பொருளின்
நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியால்
போற்றாதார் போற்றப் படும். 64
கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணின்
உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி
நாட்டுள்ளும் நல்ல பதியுள பாட்டுள்ளும்
பாடெய்தும் பாட லுள. ..... .. 65
திரியழல் காணில் தொழுப விறகின்
எறியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமைபா ராட்டும் உலகு. 66
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின்
முளைக்குழாம் நீருண்டேல் உண்டாம் திருக்குழாம்
ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள்
துன்புறுவாள் ஆகின் கெடும். 67
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்
புல்லினான் இன்புறூங்உங் காலேயம் - நெல்லின்
அரிசியான் இன்புறூங்உங் கீழெல்லாந் தத்தம்
வரிசையான் இன்புறூஉம் மேல். 68
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்
முன்னவாம் முன்னம் அறிந்தார்கட்கு - என்னும்
அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம்
அவாவிலார் செய்யும் வினை. 69
கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின்
வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையா தவர். 70
மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப்
புலத்தியல்பு புக்கான் உரைக்கும் நிலத்தியல்பு
வானம் உரைத்து விடும். 71
பதிநன்று பல்லார் உறையின் ஒருவன்
மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின்
ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ்
சோற்றான்வீ றெய்தும் குடி. 72
ஊர்ந்தான் வகைய கலினமா நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு. 73
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும்
நாழிகை யானே நடந்தன - தாழியாத்
தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார்
வெஞ்சொலா லின்புறு வார். ..... .. 74
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம்
ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின்
பொய்யாவித் தாகி விடும். 75
தேவ ரன்னர் புலவரும் தேவர்
தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்
கற்றாரைக் காத லவர். 76
தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன்
சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார்
விடுகென்ற போழ்தே விடுக உரியான்
தருகெனின் தாயம் வகுத்து. 77
நாக்கி னறிப இனியதை மூக்கினான்
மோந்தறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும்
கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து
எண்ணினான் எண்ணப் படும். 78
சாவாத எல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல். 79
சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா. 80
நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை
விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப்
படுமன்றோ பன்னூல் வலையிற் கெடுமன்றோ
மாறுள் நிறுக்கும் துணிபு. 81
கொடுப்பின் அசனங் கொடுக்க விடுப்பின்
உயிரிடை ஈட்டை விடுக்க எடுப்பிற்
கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல். 82
நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்
வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப்
பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. 83
நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்
கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்
துடையார்க்கும் எவ்வூரு மூர். 84
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகு வாள். 85
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும்
பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும்
நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன்
ஆடலாற் பாடு பெறும். 86
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் என்றும்
நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும்
நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல்
கேளிர் ஒரீஇ விடல். 87
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்
தள்ளாமை வேண்டும் தகுதி யுடையன
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை. 88
பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம். 89
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான்
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய
நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த
தூணின்கண் நிற்கும் களிறு. 90
மறையறிய அந்தண் புலவர் முறையொடு
வென்றி அறிப அரசர்கள் - என்றும்
வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃதன்றி
அணங்கல் வணங்கின்று பெண். 91
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள் காப்பினும்
பெட்டாங் கொழுகும் பிணையிலி - முட்டினும்
சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினும்
கொன்றான்மேல் நிற்குங் கொலை. 92
வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கண்
கயம்பெருகின் பாவம் பெரிது. 93
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார் கையகத் தூண். 94
எல்லா விடத்தும் கொலைதீது மக்களைக்
கல்லா வளர விடல்தீது - நல்லார்
நலந்தீது நாணற்று நிற்பின் குலந்தீது
கொள்கை யழிந்தக் கடை. 95
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து
போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான்
உண்ணாட்டம் இன்மையும் இல்...... 96
கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை
பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை
கள்வன் அறிந்து விடும். 97
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும். 98
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்
சாலும் அவைப்படின் கல்லாதான் பாடிலன்
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின். 99
மாசுபடினும் மணிதன்சீர் குன்றாதாம்
பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ்தன்னை
மாசுடைமை காட்டி விடும். 100
எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
புண்ணெக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய
யாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்
பண்புடையாள் இல்லா மனை. 101
ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்
தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்
உரன்சிறி தாயின் பகை. 102
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 103
ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவ னறியா தவனும் ஒருவன்
குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன்
கணன்அடங்கக் கற்றானும் இல். 104
மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு. 105
இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும். 106
நான்மணிக்கடிகை முற்றிற்று.
பெருவாயின் முள்ளியாரின் "ஆசாரக்கோவை"
(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)
1. ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து
2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழக்கம் பிழையா தவர்.
3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசை சிந்தியல் வெண்பா)
தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க - உய்க்காக்கால்
எப்பாலும் ஆகா கெடும்.
4. முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
6.. எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைக் சிந்தியல் வெண்பா)
எச்சிலார் நோக்கார் புலைதிங்கள் ஞாயிறுநாய்
தக்கவீழ் மீனோடே இவ்வைந்தும் தெற்றென
நன்கறிவார் நாளும் விரைந்து.
7. எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உளமற் றவற்றுள்
இயக்கம் இரண்டும் இணைவிழைச்சு வாயின்
விழைச்சுஇவை எச்சில் இந்நான்கு.
8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால்வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும்
மேதைகள் ஆகுறு வார்.
9. காலையில் கடவுளை வணங்குக
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்
தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்தி
நின்று தொழுதல் பழி.
10. நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு தீக்கனா வாலாமை
உண்டது கான்றல் மயிர்களைதல் ஊண்பொழுது
வைகு துயிலொடு இணைவிழைச்சுக் கீழ்மக்கள்
மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
ஐயுறாது ஆடுக நீர்.
11. பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)
உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத்து உண்ணார்
உடுத்தாடை நீருள் பிழியார் விழுத்தக்கார்
ஒன்றுடுத்து என்றும் அவைபுகார் என்பதே
முந்தையோர் கண்ட முறை.
12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.
13. செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்
கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்
நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்
நீர்தொடார் நோக்கார் புலை.
14. நீராடும் முறை
( இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார் உமியார் திளையார் விளையாடார்
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவி னவர்.
15. உடலைப்போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம்பூதம் பார்ப்பார் பசுத்திங்கள் ஞாயிறு
தம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்
ஐம்பூதம் அன்றே கெடும்.
16. யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)
அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்
நிகரில் குரவர் இவர்இவரைத்
தேவரைப் போலத் தொழுக என்பதே
யாவரும் கண்ட நெறி.
17. நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார் விரதம்
குறையுடையார் தீர மறவார் - நிறையுவா
மேல்கோலும் தின்னார் மரங்குறையார் என்பவே
நல்லறி வாளர் துணிவு.
18. உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்
கொண்டார் அரக்கர் குறித்து.
19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
20. உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்
பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு.
21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
இவர்க்கூண் தொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையா தவர்.
22. பிற திசையும் நல்ல
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையால் நல்ல
முகட்டு வழியூண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழிகட்டில் பாடு.
23. உண்ணக்கூடாத முறைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.
24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்.
25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை
உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறைவகையால் ஊண்.
26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
(இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார் விதிமுறையால்
உண்பவற்றுள் எல்லாஞ் சிறிய கடைப்பிடித்து
அன்பில் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்.
27. உண்டபின் செய்ய வேண்டியவை
(பஃறொடை வெண்பா)
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.
28. நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.
29. மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண்டு அடங்கல் வழி.
30. உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால் கைகூப்பித் தெய்வம் தொழுது
வடக்கொடு கோணம் தலைசெய்யார் மீக்கோள்
உடற்கொடுத்துச் சேர்தல் வழி.
31. இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இருதேவர் பார்ப்பார் இடைபோகார் தும்மினும்
மிக்கார் வழுத்தில் தொழுதெழுக ஒப்பார்க்கு
உடன்செல்லல் உள்ளம் உவந்து.
32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
புற்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவ குலம்நிழல் ஆநிலை வெண்பலிஎன்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.
33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)
பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
(இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.
35. வாய் அலம்பாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
நடைவரவு நீரகத்து நின்றுவாய் பூசார்
வழிநிலை நீருள்ளும் பூசார் மனத்தால்
வரைந்துகொண் டல்லது பூசார் கலத்தினால்
பெய்பூச்சுச் சீரா தெனின்.
36. ஒழுக்க மற்றவை
(பஃறொடை வெண்பா)
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.
37. நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.
38. எண்ணக்கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயம்தீர் காட்சியார் சிந்தியார் - சிந்திப்பின்
ஐயம் புகுவித்து அருநிரயத் துய்த்திடும்
தெய்வமும் செற்று விடும்.
39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்
அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலி
ஊட்டினமை கண்டுண்க ஊண்.
40. சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததன் மேலிரார் உள்ளழிவு செய்யார்
இறந்தின்னா செய்தக் கடைத்தும் குரவர்
இளங்கிளைஞர் உண்ணு மிடத்து.
41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்.
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.
45. பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.
46. வீட்டைப் பேணும் முறைமை
(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்.
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.
48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.
50. கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.
51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.
52. தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.
53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.
54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
55. அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.
56. தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்.
58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்.
59. சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து.
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து.
61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.
62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு சமயம் எழுந்திருப்பு
ஆசாரம் என்பர் குரவர்க்கு இவையிவை
சாரத்தால் சொல்லிய மூன்று.
63. கற்றவர் கண்ட நெறி
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும் நாணலும்தாம் கற்ற
மறந்தும் குரவர்முன் சொல்லாமை மூன்றும்
திறங்கண்டார் கண்ட நெறி.
64, வாழக்கடவர் எனப்படுவர்
(இன்னிசை வெண்பா)
பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்டு
ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்.
65. தனித்திருக்கக் கூடாதவர்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.
66. மன்னருடன் பழகும் முறை
(இன்னிசை வெண்பா)
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.
67. குற்றம் ஆவன
(இன்னிசை வெண்பா)
தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையுமஃ தன்றிப்
பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க சொல்லின்
வடுக்குற்ற மாகி விடும்.
68. நல்ல நெறி
(இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பனதாம் உவவார் இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர் அறிவறியாப்
பிள்ளையே ஆயினும் இழித்துரையார் தம்மோடு
அளவளா வில்லா இடத்து.
69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
(இன்னிசை வெண்பா)
முனியார் துனியார் முகத்தெதிர் நில்லார்
தனிமை இடத்துக்கண் தம்கருமம் சொல்லார்
இனியவை யாமறிதும் என்னார் கசிவின்று
காக்கைவெள் என்னும் எனின்.
70. மன்னன் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
வகையில் உரையும் வளர்ச்சியும் ஐந்தும்
புணரார் பெரியா ரகத்து.
71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்துப் பல்காற் பயின்று.
72. வணங்கக்கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவ குலத்தும்
வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு
நேர்பெரியார் செல்லு மிடத்து.
73. மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு கொட்டாவி காறிப்புத் தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி.
74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார்
சொல்லிற் செவிகொடுத்துக் கேட்டீக மீட்டும்
வினாவற்க சொல்லொழிந்தக் கால்.
75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார் செவிசொறுண்டார் கைம்மேல்
எடுத்துரையார் பெண்டிர்மேல் நோக்கார் செவிச்சொல்லும்
கொள்ளார் பெரியார் அகத்து.
76. சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)
விரைந்துரையார் மேன்மேல் உரையார்பொய் யாய
பரந்துரையார் பாரித்து உரையார் - ஒருங்கெனைத்தும்
சில்லெழுத்தினாலே பொருளடங்கக் காலந்தால்
சொல்லுக செவ்வி அறிந்து.
77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம்மேனி நோக்கார் தலையுளரார் கைந்நொடியார்
எம்மேனி ஆயினும் நோக்கார் தலைமகன்
தம்மேனி அல்லால் பிற.
78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார் இறைவனைச்
சாரார் செவியோரார் சாரின் பிறிதொன்று
தேர்வார்போல் நிற்க திரிந்து.
79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள்
இன்ப வகையால் ஒழுகலும் - அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமையும் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.
80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
(நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தங்குரவர் பேருரையார் இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர் - பெரியாரை
என்று முறைகொண்டு கூறார் புலையரையும்
நன்கறிவார் கூறார் முறை.
81. ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் புகார் அரசன் கோட்டி உரிமை
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வத்
தொழிற்குரிவர் அல்லா தவர்.
82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசை வெண்பா)
வண்ண மகளிரி இடத்தொடு தம்மிடம்
ஒள்ளியம் என்பார் இடம்கொள்ளார் தெள்ளி
மிகக்கிழமை உண்டெனினும் வேண்டாவே பெண்டிர்க்கு
உவப்பன வேறாய் விடும்.
83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்
அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்
கடைபோக வாழ்துமென் பார்.
84. பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழைஉறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய எளிய பயின்றனஎன்று எண்ணி
இகழின் இழுக்கந் தரும்.
85. செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை
இறப்பப் பெருகியக் கண்ணும் - திறப்பட்டார்
மன்னரின் மேம்பட்ட செய்யற்க செய்யின்
மன்னிய செல்வம் கெடும்.
86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார்; குரவரை மிக்காரைக்
கண்டுழிக் கண்டால் மனந்திரியார்; புல்லரையும்
உண்டது கேளார் விடல்.
87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை.
88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயனுரையார் உண்டி பழியார்
அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
திறத்துளி வாழ்தும்என் பார்.
89. கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்யாத வேண்டார் இரங்கார் இகந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய காட்சி யவர்.
90. தலையில் சூடிய மோத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கிட்ட பூமேவார் மோந்தபூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கு எச்சில் நீட்டார் விடல்.
91. பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு ஏக்கழுத்துந் தாளிசைப்பும்
காட்டுளே யானும் பழித்தார மாம்தம்மின்
மூத்த உளஆக லான்.
92. அந்தணரின் சொல்லைக் கேட்க
(நேரிசை வெண்பா)
தலைஇய நற்கருமஞ் செய்யுங்கால் என்றும்
புலையர்வாய் நாள்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய்ச் சொல்கேட்டுச் செய்க அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்ப தில்லை.
93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்று உழியும் செல்லார் விடல்.
94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)
கைசுட்டிக் கட்டுரையார் கால்மேல் எழுத்திடார்
மெய்சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்புரையார்
கையில் குரவர் கொடுப்ப இருந்துஏலார்
ஐயமில் காட்சி யவர்.
95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)
தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்குஎன்று
உன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்
பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.
96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)
நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.
97, சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதாலும் வாய்புதைத் தானும் அஃதன்றிப்
பெரியார்முன் யாதும் உரையார் பழியவர்
கண்ணுள்ளே நோக்கி யுரை.
98. புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.
99. அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற்களத்தும் அட்டிலும் பெண்டிர்கள் மேலும்
நடுக்கற்ற காட்சியார் நோக்கார் எடுத்திசையார்
இல்லம் புகாஅர் விடல்.
100. ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிரிழந்தான் அஞ்சினான் உண்டான்
அரசர் தொழில்தலை வைத்தான் மணாளனென்ற
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடுபெற் றார்.
ஆசாரக் கோவை முற்றிற்று
திணைமாலை நூற்றைம்பது
ஆசிரியர் கணிமேதாவியார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -V
1. குறிஞ்சி
நிலம் : மலையும் மலைசார்ந்த இடமும்.
ஒழுக்கம் புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் - பிறையெதிர்ந்த
தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
ஏமரை போந்தன ஈண்டு. (1)
சுள்ளி சுனைநீலம் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணால் கடியடுங்கா ஈர்ங்கடா யானை
உதணால் கடிந்தான் உளன். (2)
சாந்தம் எறிந்துழுத சாரல் சிறுதினைச்
சாந்தம் எறிந்த இதண்மிசைச் - சாந்தம்
கமழக் கிளிகடியும் கார்மயில் அன்னாள்
இமிழக் கிளியழா ஆர்த்து. (3)
கோடா புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்போர் - வாடாக்
கருங்கொல்வேல் மன்னர் கலம்புக்க கொல்லோ
மருங்குல்கொம் பன்னாள் மயிர். (4)
வினைவிளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனைவிளைவு நாமெண்ணப் பாத்தித் - தினைவிளைய
மையார் தடங்கண் மயிலன்னாய்! தீத்தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! (5)
மானீல மாண்ட துகில்உமிழ்வ(து) ஒத்தருவி
மானீல மால்வரை நாட! கேள் - மாநீலம்
காயும்வேற் கண்ணாள் கனையிருளின் நீவர
ஆயுமோ மன்றநீ ஆய். (6)
கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் - முறிவளர்
நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
நன்மலை நாடன் மகள். (7)
அவட்காயின் ஐவனம் காவல் அமைந்த(து)
இவட்காயின் செந்தினைகார் ஏனல் - இவட்காயின்
எண்ணுளவால் ஐந்திரண்(டு) ஈத்தான்கொல் என்னாங்கொல்
கண்ணுளவால் காமன் கணை. (8)
வஞ்சமே என்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்என் - நெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத்(து) அன்(று)என்
வலங்கொண்டாள் கொண்டாள் இடம். (9)
கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்தி
பருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்
தேன்வார்க்(கு) ஓக்கும் மலை நாட! வாரலோ
வான்தேவர் கொட்கும் வழி. (10)
கரவில் வளமலைக் கல்லருவி நாட!
உரவில் வலியா ஒரு நீ - இரவின்
வழிகள்தாம் சால வரஅரிய வாரல்
இழிகடா யானை எதிர். (11)
வேலனார் போக மறிவிடுக்க வேரியும்
பாலனார்க்(கு) ஈக பழியிலாள் - பாலால்
கடும்புனலின் நீந்திக் கரைவைத்தாற்(கு) அல்லால்
நெடும்பனைபோல் தோள்நேராள் நின்று. (12)
ஒருவரைபோல் எங்கும் பல்வரையும் சூழ்ந்த
வருவரை யுள்ளதாம் சீறூர் - வருவரையுள்
ஐவாய நாதும் புறமெல்லாம் ஆயுங்கால்
கைவாய நாதும்சேர் காடு. (13)
வருக்கை வளமலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண்மேலே மாகப் - பருக்கைக்
கடாஅமால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என்தோழி தோள். (14)
வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து. (15)
நாள்நாகம் நாறும் நனைகுழலாள் நல்கித்தன்
பூண்ஆகம் நேர்வளவும் போகாது - பூண்ஆகம்
என்றேன் இரண்டாவ(து) உண்டோ மடல் மாமேல்
நின்றேண் மறுகிடையே நேர்ந்து. (16)
அறி(கு)அவளை ஐய இடைம்மடவாய் ஆயச்
சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்
நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். (17)
என்னாங்கொல் ஈடில் இளவேங்கை நாளுரைப்பப்
பொன்னாம்போர் வேலவர் தாம்புரிந்த - தென்னே
மருவியா மாலை மலைநாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி. (18)
பாலெத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய்
தாலொத்த ஐவனம் காப்பாள்கண் - வேலொத்(து)என்
நெஞ்சம்வாய்ப் புக்(கு)ஒழிவு காண்பானோ காண்கொடா
அஞ்சாயற் கேநோவல் யான். (19)
நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!
கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்(கு)
என்னையோ நாளை எளிது. (20)
பொன்மெலியும் மேனியாள் பூஞ்சுணங்கு மென்முலைகள்
என்மெலிய வீங்கினவே பாவமென்று - என்மெலிவிற்(கு)
அண்கண்ணி வாடாமை யால்நல்ல என்(று)ஆற்றான்
உண்கண்ணி வாடாள் உடன்று. (21)
கொல்யானை வெண்மருப்பும் கொல்வல் புலியதளும்
நல்யானை நின்ஐயர் கூட்டுண்டு - செல்வர்தாம்
ஓரம்பி னான்எய்து போக்குவர்யான் போகாமல்
ஈரம்பி னால்எய்தாய் இன்று. (22)
பெருமலை தாம்நாடித் தேன்துய்த்துப் பேணா(து)
அருமலை மாய்க்குமவர் தங்கை - திருமுலைக்கு
நாணழிந்து நல்ல நலனழிந்து நைந்துருகி
ஏண்அழிதற்(கு) யாமே இனம். (23)
நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வேண்டி எறிந்(து)உழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு. (24)
கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்து
நல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்
நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோ
ஏமவேல் ஏந்திஇரா. (25)
கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல்
இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால்
மழைவளரும் சாரல் இரவரின் வாழாள்
இழைவளரும் சாயல் இனி. (26)
பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட
இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்
நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)
மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில்
நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக
எறிந்(து)உழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும்
அறிந்துழல்வான் ஓ!இம் மலை? (28)
பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர்
நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து
கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர்
தான்நாறத் தாழ்ந்த இடம். (29)
திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித்
தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண்
புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென்
மனங்காக்க வைத்தார் மருண்டு. (30)
தன்குறையி(து) என்னான் தழைகொணரும் தண்சிலம்பன்
நின்குறை என்னும் நினைப்பினனாய்ப் - பொன்குறையும்
நாள்வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள்வேங்கை யன்னான் குறிப்பு. (31)
2. நெய்தல்
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
பானலம் தண்கழிப் பாடறிந்து தன்னைமார்
நூனல நுண்வலையால் நொண்டெடுத்த - கானல்
படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம்
கடிபொல்லா என்னையே காப்பு. (32)
பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணா(து)
இருங்கடல் மூழ்குவார் தங்கை - இருங்கடலுள்
முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம். (33)
தாமரை தான்முகமாத் தண்அடையீர் மாநீலம்
காமர்கண் ஆகக் கழிதுயிற்றும் - காமருசீர்த்
தண் பரப்ப! பாயிருள் நீவரின்தாழ் கோதையாள்
கண்பரப்பக் காணீர் கசிந்து. (34)
புலால்அகற்றும் பூம்புன்னைப் பொங்கு நீர்ச்சேர்ப்ப!
நிலாவகற்றும் வெண்மணல்தண் கானல் - சுலா அகற்றிக்
கங்குல்நீ வாரல் பகல்வரின்மார்க் கவ்வையாம்
மங்குல்நீர் வெண்திரையின்மாட்டு. (35)
முருகுவாய் முள்தாழை நீள்முகைபார்ப் பென்றே
குருகுவாய்ப் பெய்(து)இரை கொள்ளாது - உருகிமிக
இன்னா வெயில்சிற கால்மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற! (36)
ஓதநீர் வேலி உரைகடியாப் பாக்கத்தார்
காதல்நீர் வாராமை கண்ணோக்கி - ஓதநீர்
அன்றறியும் ஆதலால் வாரா(து) அலர்ஒழிய
மன்றறியக் கொள்ளீர் வரைந்து. (37)
மாக்கடல்சேர் வெண்மணல் தண்கானல் பாய்திரைசேர்
மாக்கடல்சேர் தண்பரப்பன் மார்(பு)அணங்கா - மாக்கடலே
என்போலத் துஞ்சாய் இதுசெய்தார் யார்உரையாய்
என்போலும் துன்பம் நினக்கு. (38)
தந்தார்க்கே ஆம்ஆல் தட மென்தோள் இன்னநாள்
வந்தார்க்கே ஆம்என்பார் வாய்காண்பாம் - வந்தார்க்கே
காவா இளமணல் தண்கழிக் கானல்வாய்ப்
பூவா இளஞாழல் போது. (39)
தன்துணையோ(டு) ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன்துணையோ(டு) ஆட இயையுமோ? - இன்துணையோ(டு)
ஆடினாய் நீயாயின் அந்நோய்க்(கு)என் நொந்தென்று
போயினான் சென்றான் புரிந்து. (40)
உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால்
பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா
ஒருங்குவால் மின்னோ(டு) உருமுடைத்தாய் பெய்வான்
நெருங்குவான் போல நெகிழ்ந்து. (41)
கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி
தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக்
கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா
தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (42)
கடற்கோ(டு) இருமருப்புக் கால்பாக னாக
அடற்கோட் டியானை திரையா - உடற்றிக்
கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல்
வரைவாய்நீ யாகவே வா! (43)
கடும்புலால் புன்னை கடியும் துறைவ!
படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம்
தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில்
எழைமான் நோக்கி இடம். (44)
தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல்
மாழை நுளையர் மடமகள் - ஏழை
இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும்
துணைநாடி னன்தோம் இலன்! (45)
தந்(து)ஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது
வந்தால்நீ எய்துதல் வாயால்மற்(று) - எந்தாய்
மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல்
எறிமகரம் கொட்கும் இரா. (46)
பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது
சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக்
காவார் கயிறுரீஇ விட்டார். (47)
திரை மேற்போந்(து) எஞ்சிய தெள்கழிக் கானல்
விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல்
விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம்
படுவாய் இருளகற்றும் பாத்து. (48)
எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!-
பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு
நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும்
வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. (49)
திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள்
துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல்
குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப!
நெறியால்நீ கொள்வது நேர். (50)
கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண்
படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம்
சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று. (51)
திரைபாக னாகத் திமில்களி றாகக்
கரைசேர்ந்த கானல் படையா - விரையாது
வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
ஆய்ந்து வரைதல் அறம். (52)
பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத்தேறு
திரைபறையாப் புட்படையாத் - தேறாத
மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர்
முன்கிளர்ந்|(து) எய்தல் முடி! (53)
வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல்
தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர்
கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர்
நாள் நாடி நல்குதல் நன்று. (54)
கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர்
மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும்
ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள்
ஏறுநீர் வேலை எதிர். (55)
கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட
அடற்கானல் புன்னைதாழ்ந்(து) ஆற்ற - மடற்கானல்
அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்(து)எம்
முன்றில் இளமணல்மேல் மொய்த்து. (56)
வருதிரை தானுலாம் வார்மணல் கானல்
ஒருதிரை ஓடா வளமை - இருதிரை
முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப!
என்வீழல் வேண்டா இனி. (57)
மாயவனும் தம்முனும் போலே மறிகடலும்
கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று? (58)
பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய
தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம். (59)
திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக்
கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே
நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள்
மையல் நுளையர் மகள். (60)
அறி(கு)அரி(து) யார்க்கும் அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறிதிரிவார் இன்மையால் இல்லை - முறிதிரிந்த
கண்டலந்தண் டில்லை கலந்து கழிசூழ்ந்த
மிண்டலந்தண் தாழை இணைந்து. (61)
வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்
நல்லார் விழவகத்தும் நாம்காணேம் - நல்லாய்!
உவர்கத்(து) ஒரோஉதவிச் சேர்ப்பன்ஒப் பாரைச்
சுவர்கத்(து) உளராயின் சூழ். (62)
----
3. பாலை
நிலம் : குறிஞ்சியும் முல்லையும் திரிந்த மணல்வெளி.
ஒழுக்கம் : பிரிதலும் பிரிதல் நிமத்தமும்.
எரிநிற நீள்பிண்டி இணரினம் எல்லாம்
வரிநிற நீள்வண்டர் பாடப் - புரிநிறநீள்
பொன்னணிந்த கோங்கம் புணர் முலையாய்! பூந்தொடித்தோள்
என்னணிந்த ஈடில் பசப்பு? (63)
பேணாய் இதன்திறத்(து) என்றாலும் பேணாதே
நாணாய நல்வளையாய் நாணிண்மை - காணாய்
எரிசிதறி விட்டன்ன ஈர்முருக்(கு) ஈடில்
பொரிசிதறி விட்டன்ன புன்கு. (64)
தான்தாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங் குரவே! - ஈன்றாள்
மொழிகாட்டாய் ஆயினும் முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து. (65)
வல்வருங் காணாய் வயங்கி முருக்கெல்லாம்
செல்வர் சிறார்க்குப்பொற் கொல்லர்போல் - நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொற்றாலி பாஅய்த்
திகழக்கான் றிட்டன தேர்ந்து! (66)
வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய்! தோன்றார்
பொறுக்கஎன் றால்பொறுக்க லாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறுபவளம் போன்ற புணர்முருக்கம்
என்னுள் உறுநோய் பெரிது! (67)
சென்றக்கால் செல்லும்வாய் என்னோ? இருஞ்சுரத்து
நின்றக்கால் நீடி ஒளிவிடா - நின்ற
இழைக்கமர்ந்த ஏஏர் இளமுலையாள் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு! (68)
அத்தம் நெடிய அழற்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தான்இவ் அணியிழையோ(டு) - ஒத்த
தகையினால் எம்சீறூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. (69)
நின்நோக்கம் கொண்டமான் தண்குரவ நீழல்காண்
பொன்நோக்கம் கொண்டபூங் கோங்கம்காண் - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கணி மென்முலைக் கொம்பன்னாய்!
வண்டல் அயர்மணல்மேல் வந்து! (70)
அஞ்சுடர்நள் வாண்முகத்(து) ஆயிழையும் மாநிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி
ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். (71)
முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம்
இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த
மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது. (72)
செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம்
தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும்
ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. (73)
புன்புறவே! சேவலோ(டு) ஊடல் பொருளன்றால்
அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று
அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து
இதுகாண்என் வண்ணம் இனி! (74)
எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான்
விரிந்து விடுகூந்தல் வெ·காப் - புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம்
அடுதிறலான் பின் சென்ற ஆறு. (75)
நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம்
அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப்
புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட
படைநெடுங்கண் கொண்ட பனி. (76)
வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால்
வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார்
தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி
மகரக் குழைமறித்த நோக்கு? (77)
ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை
பருகுநீர் பைஞ்சுனையில் காணா(து) - அருகல்
வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்! (78)
சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால்
நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார்
எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும்
கடுத்த மலைநாடு காண்! (79)
உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர்
சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
இறந்துகண் ஆடும் இடம். (80)
கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்(கு)
என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாள்
மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)
ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப்
பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச்
செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது
நைபொருட்கண் செல்லாமை நன்று. (82)
செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும்
வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய்
இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச்
சிதடி கரையும் திரிந்து. (83)
கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத்
தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும்
பொருளில ராயினும் பொங்கெனப்போந்(து) எய்யும்
அருளில் மறவர் அதர். (84)
பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி
அருள்பொருள் ஆகாமை யாக - அருளான்
வளமை கொணரும் வகையினால் மற்றோர்
இளமை கொணர இசை. (85)
ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார்என் றாய்நீ சிறந்தாயே - செல்லாது
அசைந்தொழிந்த யானை பசியால்ஆள் பார்த்து
மிசைந்தொழியும் அத்தம் விரைந்து. (86)
ஒன்றானும் நா(ம்)மொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்(கு) அரிதாச் சேய சுரம். (87)
அல்லாத என்னையும் தீரமற்(று) ஐயன்மார்
பொல்லாத தென்பது நீபொருந்தாய் - எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமைநீள் வாட்கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து. (88)
நண்ணிநீர் சென்மின் நமர்அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதரா - எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான்கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளைத் தான். (89)
வேறாக நின்னை வினவுனேன் தெய்வத்தால்
கூறாயோ கூறுங் குணத்தினனாய் - வேறாக
என்மனைக்(கு) ஏறக்கொணருமோ வெல்வளையைத்
தன்மனைக்கே உய்க்குமோ தான். (90)
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை
நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்(டு)
இருந்துறங்க வீயும் இடம். (91)
செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக்
கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப்
பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால்
அடிவெந்து கண்சுடும் ஆறு. (92)
-----
4. முல்லை
நிலம் : காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.
கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ
இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல்
தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய
என்கொல்யான் ஆற்றும் வகை. (93)
பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர
இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என்ஆவி யூர்ந்து. (94)
மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக்
கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி
போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய
சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. (95)
இருள்பரந்(து) ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையர அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு. (96)
பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்றெறிந்த
வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து. (97)
வீயும் வியப்புறவின் வீழ்துளியால் மாக்கடுக்கை
நீயும் பிறரொடும்காண் நீடாதே - ஆயும்
கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க்
குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து. (98)
பொன்வாளால் காடில் கருவரை போர்த்தாலும்
என்வாளா என்றி இலங்கெயிற்றாய் - என் வாள்போல்
வாள்இழந்த கண்தோள் வனம்பிழந்த மெல்விரலும்
நாள்இழந்த எண்மிக்கு நைந்து. (99)
பண்(டு)இயையச் சொல்லிய சொற்பழுதால் மாக்கடல்
கண்(டு)இயைய மாந்திக்கால் வீழ்த்(து) இருண்(டு) - எண்திசையும்
கார்தோன்றக் காதலர் தேர்தோன்றா தாகவே
பீர்தோன்றி நீர்தோன்றும் கண். (100)
வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம்
ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
வாராத நாளே வரும். (101)
மான்எங்கும் தம்பிணையோ(டு) ஆட மறிஉகள
வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும்
தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது
யானிறுத்தேன் ஆவி இதற்கு. (102)
ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்
கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்
பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு. (103)
ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை
இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின்
ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று
கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. (104)
எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார்
கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை
பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய்
குருந்(து)அங்(கு) ஒடுங்கழுத்தம் கொண்டு. (105)
என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார்
அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே
வந்(து)ஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து. (106)
கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி
உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற
ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான்
எந்தலையே வந்த(து) இனி. (107)
கண்ணுள வாயின் முலையல்லை காணலாம்
எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா
அன்றொழிய நோய்மொழிச்சார் வாகா(து) உருமுடை வான்
ஒன்றொழிய நோய்செய்த வாறு. (108)
என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார்
பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல்
துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்,
இணைபிரிந்து வாழ்வர் இனி. (109)
பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்
அரியார் எளியரென்(று) ஆற்றாப் - பரிவாய்த்
தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்(டு) ஆற்றா
மலையழுத சால மருண்டு. (110)
கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார்
வானம் விளிப்பவண்(டு) யாழாக - வேனல்
வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய்
உளராகி உய்யும் வகை. (111)
தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக
வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி. (112)
பறியோலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப
நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!
விரியுளைமான் தேர்மேல்கொண் டார். (113)
பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக்
காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக்
குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து
வருந்தேயென் றாய்நீ வரைந்து. (114)
படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும்
கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண்
நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்(கு)த்
தேர் நின்ற(து) என்னாய் திரிந்து. (115)
குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே,
அரும்(பு)ஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள்
பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. (116)
கதநாகம் புற்றிடையக் காரேறு சீற
மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம்
பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்!
என்பசந்த மென்தோள் இனி. (117)
கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப்
பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித்
தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்!
என்பருவம் அன்(று)என்றி இன்று. (118)
உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத்
தகவு தகவனென்(று) ஓரேன் - தகவேகொல்
வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய்
வெண்குடையாம் தண்கோடல் வீந்து. (119)
பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால்
கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன்
துத்தம் அறையும் தொடர்ந்து. (120)
ஒருத்தியான் ஒன்றல பல்பகை என்னை
விருத்தியாக் கொண்டன வேறாப் - பொருத்தில்
மடல்அன்றில் மாலை படுவசி ஆம்பல்
கடலன்றிக் காரூர் கறுத்து. (121)
கானம் தலைசெயக் காப்பார் குழல்தோன்ற,
ஏனம் இடந்த மணிஎதிரே - வானம்
நகுவதுபோல் மின்ஆட நாண்இல்என் ஆவி
புகுவது போலும் உடைந்து. (122)
இம்மையால் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆமென்பார் ஓரார்காண் - நம்மை
எளியர் எனநலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளியச் சுடப்பட்ட வாறு. (123)
------
5. மருதம்
நிலம் :வயலும் வயல் சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஊடலும் ஊடல் நிமிர்த்தமும்.
செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்
இவ்வகை ஈர்த்துய்ப்பான் தோன்றாமுன் - இவ்வழியே
ஆடினான் ஆய்வய லூரன்மற்(று) எங்கையர்தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து. (124)
மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! மண்யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் - தூக்கோல்
தொடியுடையார் சேரிக்குத் தோன்றுமோ சொல்லாய்
கடியுடையேன் வாயில் கடந்து. (125)
விளரியாழ்ப் பாண்மகனே! வேண்டா அழையேல்
முளரி மொழியா(து) உளரிக் - கிளரிநீ
பூங்கண் வயலூரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை. (126)
மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் - இங்கண்
குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)
செந்தா மரைப்பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந்தார்ப் புனல்வாய்ப்பாய்ந்(து) ஆடுவாள் - அந்தார்
வயந்தகம்போல் தோன்றும் வயலூரன் கேண்மை
நயந்தகன்(று) ஆற்றாமை நன்று. (128)
வாடாத தாமரைமேல் செந்நெற் கதிர்வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் - ஈடாய
புல்லகம் ஏய்க்கும் புகழ்வயல் ஊரன்தன்
நல்லகம் சேராமை நன்று. (129)
இசையுரைக்கும் என்செய் திரம்நின் றவரை
வசையுரைப்பச் சால வழத்தீர் - பசைபொறை
மெய்ம்மருட்(டு) ஒல்லா மிகுபுனல் ஊரன்தன்
பொய்ம்மருட்டுப் பெற்ற பொழுது. (130)
மடங்(கு)இறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண!
தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு
பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய்
கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. (131)
எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர்
மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில்
என்னா(து) இறவா(து) இவணின் இகந்தேகல்
பின்னாரில் அந்தி முடிவு. (132)
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ்
செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
நையும் இடமறிந்து நாடு. (133)
கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ
பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை
குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா
அடியேன் பெற்றா அருள். (134)
என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும்
முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு
அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர்
பணியிகவான் சாலப் பணிந்து. (35)
எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே!
தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண்
உளர உளர உவன்ஓடிச் சால
வளர வளர்ந்த வகை. (136)
கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்
ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்(து) அழகாத்
தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. (137)
கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ
வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி
வந்(து)ஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன்
தந்தையார் தம்மூர்த் தகை. (138)
மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு
தாராத்தோ(று) ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே
ஊராத்தே ரான்தந்தை ஊர். (139)
மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்(று)
உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார்
வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊ ரரவர் மகள். (140)
அணிக்குரல்மேல் நல்லாரோ(டு) ஆடினேன் என்ன
மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
யாட்டை இருந்துறையும் ஊர். (141)
தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை
புண்கயத் துள்ளும் வயலூர ! - வண்கயம்
போலும்நின் மார்பு புளிவேட்கைத்(து) ஒன்(று)இவள்
மாலும்மா றாநோய் மருந்து. (142)
நல்வயல் ஊரன் நறுஞ்சாந்(து) அணிஅகலம்
புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார்
கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப
பாட்டு முரலுமாம் பண். (143)
அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச்
சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை
நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று
மனைநோக்கி மாண விடும். (144)
பாட்டார வம்பண் அரவம் பணியாத
கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம்
மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து
இந்திரன்போல் வந்தான் இடத்து. (145)
மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த
தன்மை யழியத் தரள மூலையினாள்
மென்மைசெய் திட்டாள் மிக. (146)
செங்கண் கருங்கோட்(டு) எருமை சிறுகனையால்
அங்கண் கழனிப் பழனம்பாய்ந்(து) - அங்கண்
குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி
தவளையும்மேற் கொண்டு வரும். (147)
இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமை
மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த
கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி
நெற்போர்வு சூடி வரும். (148)
புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும்
பெண்கிடந்த தன்மை பிறி(து)அரோ - பண்கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான்நாணும் ஆறு. (149)
கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!
எண்ணுங்கால் மற்(று(இன்(று) இவளடுநேர் - எண்ணின்
கடல் வட்டத்(து) இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்(து) ஆர்உளரேல் ஆம். (150)
சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து
நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய
மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே!
எங்கையரின் ஆடலாம் இன்று. (151)
முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த
இலையாலும் இட்ட குறியை - உலையாது
நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால்
தார்சிதைக்கும் வேண்டா தழூம். (152)
துனிபுலவி ஊடலின் நோக்கு(எ)ன் தொடர்ந்த
கனிகலவி காதலினும் காணேன் -முனிஅகலின்
நாணா நடுங்கும் நளிவய லூரனைக்
காணாஎப் போதுமே கண். (153)
சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனி(வு) ஒழியச் செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார்
இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.
திணைமாலை நூற்றைம்பது முற்றிற்று
!->
No comments:
Post a Comment