Sunday, 22 March 2015

CHOLA MANDALA SAMANAM (சோழ மண்டல சமணம் )
சினகஞ்சி பருத்திக்குன்றங் கரந்தை பூண்டி
   
சிங்கைவைகை திருப்புறம்பை அருகை தாசை
   
சினகிரிவண் தீபைசித்தை வீரை கூடல்


என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்க் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத்துள்ள சமணர் ஊர்கள் கூறப்படுள்ளதெனத் தோன்றுகிறது. திரு. சாஸ்திரம் அய்யர் என்னும் சமணக் பெரியார் ஒருவர் ஜைனசமய சித்தாந்தம் என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841 u) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.
   

  ‘‘இவர்களுடைய (சைனருடைய) ஸ்தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றாமூர் என்றும், பெருமண்டூர் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சீபுரம் என்றும், திருப்பதிக் குன்றமென்றும், பெரிகுளம் என்றும், மூடுபத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், கனககிரி என்றும் இருக்கின்றன. பெரிகுளத்தில் ஆசாரிய மடமுண்டு’’  
     இதனால், இவ்வூர்கள் சைனக் கிராமங்களென்பது விளங்கும்.


    சமண ஊர்களின் ஜாபிதா என்னும் கையெழுத்து ஏட்டுச்சுவடி ஒன்று உண்டு. இந்த நூலின் இறுதியில், இந்த ஜாபிதா சகாத்தம் 1738 இல் எழுதிக்கொடுத்த கய்பீத்து என்று காணப்படுவதால், இது கி.பி. 1819 இல் எழுதப்பட்டதாகும். அஃதாவது 138 ஆண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டது. இந்நூலில், இக்காலத்துள்ள சமணர் ஊர்களின் பெயரும் கோயில்கள் இத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க. இருபிறைக் குறிக்குள் . கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும், .கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும் குறிக்கும். எண்கள் எத்தனை கோயில்கள் என்பதைக் காட்டும்.

சோழ தேசம்,

     தஞ்சாவூர், மன்னார் கோவில் (.கோ.1) தீபங்குடி, வேதாரணியம், அணிமதிக்கொடி (.கோ.1, .கோ.1), திருவாரூர், கீழப்படுகை, திருவையாறு, தொழுவனங்குடி, கும்பகோணம், குப்பசமுத்திரம், சிறுக்கும்பூர், ஆமூர், நாகப்பட்டணம், தோப்புத்துறை, உரத்தநாடு.
 தஞ்சாவூர் மாவட்டம்


திருத்துறைப்பூண்டி:(Thiruthuraipoondi)திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சுரர் கோயிலின் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் 3-உடைய II-ஆவது ஆண்டில் (கி.பி. 1227. மே. 15). எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த பள்ளிச்சந்தம். குறிக்கப்பட்டுள்ளது.164. Top. Ins Vol II (1527. 466 of 1912)இதனால், இவ்வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயிலுக் குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும்.

A Thirthankara sculputre was found at Doli village of Thiruthuraipoondi taluk in Tiruvarur district.
G. Thillai Govindarajan, headmaster, Panchayat Union Primary School, Ponthiyakulam, Thanjavur district, and B. Jambulingam, Superintendent, Tamil University, Thanjavur, stumbled upon the sculpture while carrying out field work for the project ‘Jainism in Thanjavur district'.
According to a release here on Thursday, the sculpture is 32 inches high and 19 inches wide. It is on a pedestal in sitting ‘dhyana' posture on a lion throne. On the rear side yakshas are found.
A triple umbrella is above the head. Ears are elongated and eyes, closed. It is in Tikambara posture. The sculpture belongs to later Chola period.
“Thirthankara sculptres were also found in seven other places in Tiruvrur district. From this it is known that Jainism prevailed widely in this area during that period,” said Mr. Thillai Govindarajan and Mr. Jambulingam.


திருநாகேச்சுரம்: (Thirunageswaram)கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம். தென்கரைத் திரைமூர் நாட்டில், இருந்த மிலாடுடையார் பள்ளி, என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட அரசனால் கட்டப் பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்ததென்றும், அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேச்சுரத்துச் சைவக்கோயில் கட்டப்பட்ட தென்றும் இவ்வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்டபத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப்படுகின்றன. இவை, இவ்வூரார் கூறுவதை உறுதிப் படுத்துகின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண உருவங்கள் காணப் படுகின்றன.( 165. S.I.I. Vol III (No.91) M.E.R. 1912, p 7 and 62 S.I.I. Vol II P. 116)திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக்காலத்தில் குமார மார்த்தாண்ட புரம், என்று பெயர் வழங்கியதென்றும், ங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும் கோபுரத்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 22 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.
திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்):(Thirupugaloor) இவ்வூர் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்த மானீச்சுரர் கோயில் உண்டு. இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக்கோயிலின் பெயரைக்கொண்ட இது பண்டைக் காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்டுச் சைவக் கோயிலாக்கப் பட்டது. அப்பரும் சம்பந்தரும் இக்கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக் காலத்தில் இருந்தனர்.

பழையாறை:( Pazhaiyarai)(இதனைப் பழையாறு, பழசை, என்றுங் கூறுவர். பட்டீச்சுரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது. 166. 222 of 1911 Ep. Rep. 1912 P.7  
 167 கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோயிலும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக்கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச் செய்யுள் வருமாறு:

தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினை சேரா.
முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல்
விண்ணன்
செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுஞ் செய
வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ணலடி
விழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழத்


மருத்துவக்குடி(Maruthuvakudi)இவ்வூர்பாபநாசம் தாலுகாவில் உள்ளதுஇவ்வூர் தொடர்ந்து நின்ற வல்வினை துறந்துபோ மாலரோஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் 3 உடைய 16 ஆவது ஆண்டில் (கி.பி. 1194 இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப்பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன. 168. (392 of 1907) Ep.Rep. 1908இதனால், இவ்வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.


திருவலஞ்சுழி:(Thiruvalanchuzhi) இது கும்பகோணம் தாலுகாவினுல் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன.169. Tanjore. Dt. gazetteer, Vol. I P.223. இதனால், இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

மன்னார்குடி: (Mannargudi)மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர். பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.70. Tanjore Dt. Gazetteer Vol. I Topographical List of Antiquities P.280. List of the Antiquarian Remain in the Presidency of Madras G RobertSewell, Madras 1888. Archaeological Survey of Southern India I.


 இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம்ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.171. Ep.Rep. 1922, P.98, 99

MannargudMallinathar:
This is an ancient temple built during the reign of the Chola dynasty in the twelfth century. It is very famous among all the ancient tirths of Tamil Nadu. Apart from the idol of Bhagawan Mallinathar which is divine and very impressive there are idols of Dharma Devi, Saraswathi Devi,Padmavathy DeviJawalamalini Amman and other in the temple which are also miraculous and impressive. Every year during the summer 11 day festival i.e. Thiruvizha or Bramorchavam will be celebrated in grand manner. Currently in Tamil Nadu it's happening in very few Jain temples. Last two days of the festival is very famous. 11th day Thiruvizha is called "Kannadi Pallkku", in this Sri Jawalamaini Amman will give darshan to the devotees. No other Jain temples in Tamilnadu is having this unique Pallkku.

https://youtu.be/yZ_KP2xcF3wTo view kannadi pallakku urchavam : clikc hereதீபங்குடி: (Deepankudi) நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத்திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் தீபங்குடிப் பத்து, என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே கலிங்கத்துப் பரணி, என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத் தீபங்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.172. Tan. Dt. Gazetteer. Vol.I (Top, List of Antiquities p.276. List of Antiquarian Remains in the Presidency of Madras Robert Sewell, 1882)Read Kalingaththu parani கலிங்கத்துப் பரணி,
  Read 'Yapparungkala Karigai amirthasagar.'
An Inscription of Rajendra II, belonging to the 11th Century, has been found in Kailasanathar temple at Deepankudi in Kodavasal taluk in Tiruvrur district recently.
G.Thillai Govindarajan, Headmaster, Panchayat Union Primary school, Kothankudi, who is carrying out a project with the aid of New Delhi Nehru Trust of Indian Collections under the title "Jainism in Thanjavur district" has found the inscription during the field study.
The inscription belonging to the period of Rajendra II, is found in a pillar of six ft height in the temple premises which is under renovation. Inscription is engraved in all the four sides of the pillar. It starts with the praising of the King. It registers about donations offered to the presiding deity, Kailasanatha of Siva temple by Arulmozhinangai, sister of Rajendra II and the daughter of Rajendra I. On her behalf, it was inscribed by Aramabanandi, a Jain who belonged to Deepankudi temple. The inscription also records about the donations for offering rice, vegetables and curd rice daily for the presiding deity. The Jain temple of Deepankudi is in worship now.
An inscription found in Sttambur near Chenji in Tamil Nadu speaks about a Jain known as Aramanandi.


DEEPAMKUDI  is a very old Jaina village situated in Kodavasal taluk of the newly created Thiruvarur district.Tamil nadu. It has a very beautiful Jinalayam dedicated to Sri Rishaba -popularly worshipped as Deepanayaga swami. The temple is said to be more than 1500 years old. It has been told as hearsay that the Twins of Lord Sri Rama Lava and Kusa while wandering in the forest during heavy rain and gusty winds saw a light burning in the middle of the forest without being disturbed by the whirlwind. They were surprised. when they approached they saw the light burning under the open sky above and in front of Lord Rishaba image. They stayed there and offered prayers. .
The present temple is a beautiful temple and unique with its architecture, which no one can see in any jain temple in Tami nadu. The ceiling is dome shaped and the pillars are also different from those seen in other temples. the architecture resembles the one found in Karnataka. It is said that Deepamkudi temple is the last of the jain temples in series built on the route of the holy Kaveri river. Apart from the main shrine for Sri Rishaba the temple has 9 individual smaller shrines for Sruthaskandham. Bramma deva,Dharmadevi, Padmavathi, Jwalamalini etc. Thus the Deepankudi temple is nothing but a temple complex.
The ceiling of front Mantap has 24 Thirthankara made of bricks and lime motar,
The gopuram at the front entrance is very beautiful in 5 tiers. The vimana built over karba griha is very beautiful with figures of Thirthankara, Yakshi etc
There are several metal idols. The temple has many palm leaf manuscripts. Daily poojas and periodical special poojas are performed regularly. Deepamkudi is a household name among Tamil nadu jains. 
 Deepamkudi has got immortalized in the literary world also as two great Tamil savants lived here. One was Poet Jayam Kondan who wrote 'Kalingaththu parani'- a poetic variety in praise of the Chola King Kulothunga I. Another one is Amrita sagara who wrote a grammer work called 'Yapparungkala Karigai'.An unparalleled contribution to Tamil Grammar by a jaina Ascetic. Contributions to the creation and growth of Tamil script, Tamil Literature and grammar by Jaina ascetics is a very big story.
This temple complex had been in disrepair for hundreds of years.  This Jain temple is under the control of Hindu Religious and Charitable . Endowments (HRCE) a Government Department created to administer the Hindu temples. 
Kodavasal taluk, Thiruvarur district, Tamil nadu
 Jain Places connecting Deepamkudi: Mannarkudi- 27 km; Kumbakonam25Km; Thanjavur 60Km 
Nearby town- Kodavasal
Moola Nayak- Sri Rishabanatha as Deepa nayaka
To view the full view and gopura kalsa sthapanam of deepamkudi.
click the the link below
https://youtu.be/6Z_kIweSKZ4Kumbakonam jain temple in Ramasamy koil street தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,173. S.I.I. Vol II (no.4, P.43) அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளிச்சந்தம்,174. S.I.I. Vol II Part I (no.4, P.47) திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி, 175. S.I.I. Vol II (No.5, P.54)உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி 176. S.I.I. Vol II Part II (No.31, 33, 35)என வரும் சாசனப் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

செந்தலை: (Senthalai)ஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்ததுஇங்குள்ள சுந்தரேச்சரர் என்னும் சிவன் கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்அச் சாசனப் பகுதி இது:
கோப்பர கேசரி பன்மர்க்கு யாண்டு 12-வது கா...................ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்துவடகவிர................. பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான் கொண்டு கடவ.162 (Top. Ins. Vol ii (1293) S.I.I. (Toxtf) Vol VI NO.443
மற்றொரு சாசனம்நங்கை ஒளி மாதியார் தாயார் நக்க நீலி163163. S.I.I. (Texts) Vol VI. NO. 422)என்பவர் பொன் தானம் செய்ததைக் கூறுகின்றது.
இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும் ஒரு கோயிலின் கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.


There were evidences of Jain influence in nearby Tirukkattuppalli, Senthalai, Amankudi, Karuppur, Allur and Azhisikudi,” he added. There were literary references of Orathur village in Sangam literature like ‘Pathitrupattu’, he added. He was assisted in the field study by Ramya, a research scholar from the village and K Manoharan, T Sundar.அமண்குடி: (Amankudi)சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த வெண்ணாடில் அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச்சுரக் கோயில் கல்வெட் டெழுத்துக்கள் கூறுகின்றன. 177. S.I.I. Vol II Part II (No.31, 33, 35)  இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்திட்டைக் குடி:(Karanthattankudi ) (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

to view the full temple and pooja.
click the link below
Karanthattankudi vedio https://youtu.be/-dDOOujxfTw

குகூர்: (Kukoor)இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.178. 288 of 1917.திருவாரூர்:(Thiruvarurஇவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர்அக்காலத்தில் இவ்வூர்த்திருக்குளம் மிகச் சிறியதாக இருந்ததுஅச்சிறு குளத்தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும்மடங்களும்நிலங்களும் இருந்தனகி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்இவ்வூரில் சைவச் சமணர் கலகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சைவர் துரத்தினர்தண்டி அடிகள்நமிநந்தியடிகள் என்னும் சைவநாயன்மார்கள் காலத்தில் இக்கலகம் நிகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது.161(இந்தக் கலகத்தைப் பற்றி இந்நூல்சமண சமயம் குன்றிய வரலாறு என்னும் அதிகாரத்திற் காண்க.)க்கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த  கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக்கப்பட்டுப் பெரிய குளமாகத் தோண்டப்பட்டதுஇப்போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப்பரப்பைக் கொண்டுள்ளதுஇக் குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தது என்பது அறியத் தக்கது.
தமிழ்நாட்டுச் செய்தி
தஞ்சை அருகே குடவறை குகை கண்டுபிடிப்பு

[ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2009, 01:46.36 AM GMT +05:30 ]
http://www.newindianews.com/photos/thumbs/2009/12/21_001.jpgகொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான தில்லை கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தச்சன்குறிச்சியில் உள்ள மலையில், கடந்த 17ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குடவறை குகை கண்டுபிடி க்கப்பட்டது.
இதுகுறித்து தில்லை கோவிந்தராஜன் கூறியது:

மலையின் மையப்பகுதியில் குகையை குடைந்து குகை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே செல்வதற்கு 12 படிக்கட்டுகள் உறுதியான செம்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இப்படிக்கட்டுகள் மிகவும் சிதைவடைந்துள்ளன.
இக்குகையின் பாதுகாப்பிற்காக மேல் தளத்தினைச் சுற்றி செம்பாறையால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குகையின் உயரம் 15 அடிக்கு மேல் உள்ளது. முன் பகுதி சற்று அகலமாக காணப்படுகிறது. இப்பகுதியை அடுத்து கிழக்கு நோக்கியவாறு ஒரு சுரங்கம் போன்ற அறை காணப்படுகிறது.

சமணர் காலத்தில் கட்டப்பட்ட இக்குகையை சோழர்கள் ஆட்சிக் காலத்தில் சீர்செய்திருக்கலாம். மேலும் மையப்பகுதியை பிரிக்குமிடத்தில் சுவரில் தூண் போன்ற அமைப்பில் முக்கோணவடிவில் விளக்குமாடம் செதுக்கப்பட்டுள்ளன. இக்குகை சமணர் தங்குமிடமாக இருந்திருக்கலாம். இவ்விடத்தினை அரசு ஆய்வு மேற்கொண்டு சுற்றுலாத்தலமாக பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Jai Jinendra,
1) Had received this comment from Sridharan Appandairaj on Facebook today.

Last 25th of January 2015 I visited ORATHUR village in Thanjavur district and came to know a THEERTHANGAR sculpture was thrown in a Water tank (Pond) as per the advice of a Sivaacharyar .''Last year it was done'' the residents conveyed.That time the water level is around 12 - 13 feets height . During 22nd Feb in a Swaraj mazda van 30 people from in and around Pondicherry went to that site to find the sculpture in the tank. After 2 Hours Severe Efforts by sinking in 12 feets water the Sculpture redeemed by our troupe.
A retired teacher Mr.DOSS native of Thennathur village aged 74 took severe strain and pain to uplift the Sculpture.One local student of 12th std Ajeeth also given Great share in uplifting ....Let us pray for the betterment of Ajeeth..(pouring water to Bhagwan in Foto).
Jainism is briefed in that site and around 70-80 local residents joined in that occasion. All the residents have the willingness to promote the Jain Sculpture through a small building in their village.Let us unite and promote this jain monument.http://www.newindianexpress.com/states/tamil_nadu/9th-century-sculptures-found-near-Thanjavur/2013/04/16/article1546600.ece

ThirukattupalliStone sculptures of Jain, Vishnu and Lakshmi, said to belong to the 9th century period, was found in a village near Tirukkattuppalli in Thanjavur district.
Mani Maaran, Tamil Pundit of Thanjavur Saraswati Mahal, who made a field study at Orathur village located around 30 kilometres from Thanjavur, said that a Jain sculpture with the Tirthankara in a sitting posture was found on a tank bund in the village.
Similarly, a Vishnu sculpture, reportedly salvaged from a dilapidated temple in the village, has been now placed in a small temple like structure. Vishnu is seen standing with a conch and wheel in his hands. Intricate jewellery motif is also seen in this sculpture. This apart, a Lakshmi sculpture in a sitting posture was also found in the village.
Stating that these sculpture could be of the later Chola period, around 9th century AD, Mani Maaran said the suffix ‘Palli’, denotes ‘of Jain influence’. The region nearby Tirukkattupalli and other areas could have been under the influence of Jainism. A Jain temple could have been in existence in the village during the later Chola era since the Chola kings patronised Jainism, he said.

There were evidences of Jain influence in nearby Tirukkattuppalli, Senthalai, Amankudi, Karuppur, Allur and Azhisikudi,” he added. There were literary references of Orathur village in Sangam literature like ‘Pathitrupattu’, he added. He was assisted in the field study by Ramya, a research scholar from the village and K Manoharan, T Sundar.
NAGAPATTINAM: An 11th-century idol of a Jain Tirthankara has been found in a riverbed near Vedaranyam in Nagapattinam district. 

The stone idol, about two feet tall, was found without its head. Experts who inspected it felt that the head could have been knocked off by vandals. However, the possibility of accidental wreckage could not be ruled out as well, they added. 

"The Tirthankara is found on a pedestal in a sitting, meditative (dhyana) posture. The pedestal has been carved like a lion throne. In the rear side, floral symbols have been carved. The sculpture could be that of the 24th Jain Tirthankara belonging to the later Chola period," said G Thillai Govindarajan, a member of the team that found the idol. 
http://www.thehindu.com/todays-paper/tp-national/thirthankara-sculpture-found/article2616858.eceSerumakkanallur (June 2009)
Serumakkanallur Tirthankara
Photo: Thillai Govindarajan
Based on the information given by Mr.Ayyampet Selvaraj we carried out field study and identified a Mahavira, the 24th Jain Tirthankara statue in Serumakkanallur of Papanasam taluk of Thanjavur district. It was found in Sabari Mukkayi Amman Thidal in Puliyankudi. Having a height of 3' and a breadth of 21/2' it was in padmasana sitting postureand is in mediation. It has a lion throne, chamara bearers, triple umbrella and a tree. The face and the top portion of the umbrella are broken. The sculpture belongs to the later Chola period. It has elongated ears and closed eyes and is in Tikambara posture. An inscription states that a government official Sirimakkanallur Kanniveran lived here. Another incriptin shows the areas were under the control o the Cholas and Jainism was widely prevalent. 
The local worship this sculpture as Karuppasamy and offer goat sacrifice. Daily worship is done and special pujas are conducted on Fridays in the Tamil month of Adi. 


Suraikkudipatti (February 2010) 
A Jain Tirthankara was identified during field study in Suraikkudipatti in Budalur block of Tiruvaiyaru taluk in Thanjavur district. It is found in the Ayyanar temple near Budalur. Having a height of 3 1/4' and a breadth of 21/2' it was found on a pedestal on sitting dhyana posture on the ion throne. At the rear side of the sculpture yakshas are found in standing posture. Triple umbrella is found above the head. It has elongated ears and closed eyes and is in Tikambara posture.  It belongs to later Chola period.
 A Pallava inscription found in Ponvilainthanpatti which is very near to this place records about the prevalence of Jainism here. From this it is understood that since th period of Pallavas Jainism was prevalent in this area. 


 http://www.dinamani.com/tamilnadu/article672462.ece


குடவாசல் அருகே சமணர் சிலை கண்டெடுப்பு
By
First Published : 13 November 2011 04:41 AM IST
·       
·         


குடவாசல் அருகே பூங்காவூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் சிலை.
குடவாசல் அருகே சமணர் சிலை கண்டெடுப்பு
திருவாரூர், நவ. 12: திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் சிலை அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மன்னை ப. பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
சோழ நாட்டில் சமண மதத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்ட போது குடவாசல் வட்டம், பூங்காவூர் கிராமத்தில் உள்ள கீழத்தெரு ஈஸ்வரன் குளத்தின் வடகரையில் அரச மரத்தின் கீழ் ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலை இருப்பது தெரிய வந்தது. அந்தச் சிலையை கிராம மக்கள் புத்தர் சிலை என நினைத்து வழிபட்டு வருவது தெரிய வந்தது என்றார்.
மேலும், இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டதில், சிலை பலகைக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. உயரம் 69 செ.மீ., அகலம் 39 செ.மீ. சிலையில் தீர்த்தங்கரர் முக்குடையின் கீழ் அமர்ந்த வண்ணம் தியான நிலையில் காணப்படுகிறார். முகம், கழுத்து, உடல் பகுதி, கை, கால் முக்குடை ஆகியவை அழகாக வடிக்கப்பட்டுள்ளன. காதுகள் நீண்டும், தலைமுடி சுருள் சுருளாகவும் உள்ளன.
மூக்கு மற்றும் வலது முழங்கால் பகுதி சிதைந்துள்ளது. இடுப்புப் பகுதி அருகே தசை மடிப்புகள் காணப்படுகின்றன. தோளுக்கு மேல் அரை நீள வட்டத்தில் பிரபாவளி காட்டப்பட்டுள்ளது. தீர்த்தங்கரரைச் சுற்றிலும் கொடி மற்றும் மலர் தோரணங்களும் காணப்படுகின்றன. இவரது இரு பக்கங்களிலும் தலையில் கீரிடம் அணிந்த இரு இயக்கர்கள் சாமரம் வீசுவது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை கிபி. 11 மற்றும் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
குடவாசல் கீழ ஓகைப் பகுதியில் தற்போதுள்ள கைலாசநாதர் கோயில் பிரகாரத்தைத் தோண்டும் போது மூன்றரையடி உயரம் கொண்ட சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இந்த இடம் மிகப் பெரிய சமண பள்ளியாக இருந்திருக்க வேண்டும். சோழர்கள் காலத்தில் சிறப்புடன் இருந்த இந்த சமண ஆலயம் பின்னர் சிதைவுற்றுத் தரைமட்டமாக அழிந்திருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் சமண சமயம் நன்கு வளர்ச்சியடைந்திருந்ததும், இந்த ஊருக்கு அருகே தீபங்குடியில் சமணர் ஆலயம் இருந்ததும் இதை உறுதிப்படுத்துகின்றன என்றார் பிரகாஷ்.


 திருச்சிராப்பள்ளி மாவட்டம்


உறையூர்:(Uraiyur) இதனை உறந்தை, கோழியூர் என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது (120. மதுரைக் காண்டம், காடுகாண் காதை, (1-9)
இதனால், கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது( 121. அஜீவக வாதச் சருக்கம் 8)உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்துவிட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய தக்கயாகப்பரணி உரையில் கூறப்பட்டுள்ளது.(122. கோயிலைப் பாடியதுதாழிசை 70 உரை)சோழ அரசன்மேல் சினங் கொண்ட சிவ்பெருமான், மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது(123. உறையூர் அழித்த சருக்கம் .) இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுக; சைவர் ஆயினும் ஆகுக; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்தபிறகு, திருச்சிராபள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.
எங்கெங்கு காணினும் சக்தி
By முத்து வேங்கடேசன்
First Published : 16 July 2010 12:00 AM IST
·        

முற்காலச் சோழ வேந்தன் பெருங்கிள்ளி, திருச்சிராப்பள்ளி- உறையூரை தலைநகராகக் கொண்டு, கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆண்ட கால கட்டம்.... கோவலன் மனைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் வீண்பழியால் படுகொலை செய்யப் பெற்றதால் வெகுண்டெழுந்தாள். கோபக் கனலால் பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சி புரிந்த மதுரை மாநகரையே எரித்தாள்! இதனை இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் விவரிக்கின்றது.
சோழன் அமைத்த பத்தினிக் கோட்டம்
    கோபக் கனலுடன் காட்சி அளித்த பத்தினி தெய்வமாம் கண்ணகி தேவிக்கு முதன் முதலாக ஒரு கோயிலை, தன் தலைநகர் உறையூரிலேயே அமைத்தான் பெருங்கிள்ளிச் சோழன். கண்ணகி கோபக் கனலுடன், உக்கிரத்துடன் காணப்பட்டதால் கூரையோ, கோபுரமோ, விமானமோ இன்றி  வெட்ட வெளியிலேயே கோயில் அமைத்தான் அரசன். ஆம்! உறையூரில் வெட்ட வெளியிலேயே பெருங்கிள்ளிச் சோழன் அமைத்த பத்தினிக் கோட்டமே, பின்னாளில் வெட்ட வெளி வெக்காளி அம்மன் கோவிலாக விரிவாக்கம் பெற்றது என்றொரு கருத்து நிலவுகின்றது.
சோழன் பெருங்கிள்ளி அமைத்த பத்தினிக் கோட்டம், முதன் முதலாக அமைக்கப் பெற்ற வரலாற்றை, நெஞ்சையள்ளும் செஞ்சொல் சிலப்பதிகாரம் சிறப்பாகவே எடுத்துக் காட்டுகின்றது.
"அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி
கோழியகத்து எத்திறத்தானும்
வரம் தரும் இவளோர் பத்தினிக்
கடவுள் ஆகுமென, நங்கைக்குப்
பத்தினிக் கோட்டமும் அமைத்து நித்தம் விழா அணி நிகழ்வித்தோனே!' என்கிறார் இளங்கோவடிகள்.
   இதன் பொருள், "பாண்டியன் வெற்றிவேல் செழியன், கொங்கிளங் கோசர், இலங்கை வேந்தன் கயவாகு ஆகியோர் பத்தினித் தெய்வமாம் கண்ணகி தேவியை வழிபட்டு நலம் பெற்றனர் என்பதைக் கேள்விப்பட்டான் சோழன் பெருங்கிள்ளி. அப்போது உறையூரைத் தலை நகரமாகக் கொண்டு ஆண்டவன் அவ்வரசன்.
  பாடலில் இடம் பெறும் "கோழியகத்து' என்பது உறையூரையே குறிப்பிடும். உறையூருக்குக் கோழியூர், உறந்தை என வேறு பெயர்களும் உண்டு.
   இதனடிப்படையில் "வெக்காளி' அம்மனை கண்ணகியாகவும் சிலர் கருதுகின்றனர். எது எவ்வாறாயினும் தமிழகத்தில் "மாரியம்மன் வழிபாடு' தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது என்பதில்  ஐயம் ஏதும் இல்லை. உத்தம பத்தினிகளும், ஊரைக் காக்க உயிர் கொடுத்த வீர நங்கையரும்கூட அம்மனாகியிருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயின் புராண அடிப்படையில், பரசுராமரின் தாய் ரேணுகா தேவியே முதலில் தோன்றிய மாரியம்மன் ஆவார்.   
தமிழ்நாட்டில், சமயத்தில் வரம் தந்து சங்கடம் தீர்த்திடும் சமயபுரம் மாரியம்மன் ஆலயம், அங்காள மாரியம்மன் ஆலயங்களான அன்பில் மாரியம்மன், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மாரியம்மன், சென்னை தேவி உடுமாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன், விருதுநகர் மாரியம்மன், திருமெய்யம் இளஞ்சாரா மாரியம்மன், கொன்னையூர் மாரியம்மன், கோவை கோணியம்மன், மாசாணி அம்மன், பண்ணாரி அம்மன், பொள்ளாச்சி மாரியம்மன், திருவண்ணாமலை மாவட்டத்து படை வீட்டு அம்மன், மேல் மலையனூர் அம்மன், வேலூர் அங்காள பரமேஸ்வரி அம்மன், பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியார் அம்மன், இருக்கண்குடி மாரியம்மன், தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன், மதுரைத் தெப்பக்குள மாரியம்மன், திருச்சி தெப்பக்குள மாரியம்மன், குழுமாயி அம்மன், திருப்பூர் மாரியம்மன், சிறுவாச்சுர் மதுரகாளியம்மன் என மாரியம்மன் ஆலயங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.
    இவை தவிர கிராமங்கள் தோறும் மாரியம்மன் ஆலயங்கள் உண்டு. "கிராம தேவதை' வழிபாடே பின்னாளில் மாரியம்மன் ஆலயங்களாக மலர்ந்தன என்பார் "கவியரசு' கண்ணதாசன்.
  

 Uraiur (courtesy dinamany weekly:)
வெள்ளனூர்:(Vellanoorதிருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன; (Arch. Rep. 1909-1910).

பழநாகப்பள்ளி:(PAZHANAGAPALLI) கரூர் தாலுகா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ வேந்தர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்குத் திருவிளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது(124. 258 of 1930-31)

அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுகா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசசோழ தேவரது 19 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், திருவிடைக்குடி அமுது மொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டள்ளது.125. S.I.I. (Texts) Vol. VII No.198 P.98

புலிவல்லம்: திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில், புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச்சந்தம் கூறப்படுகிறது  126. S.I.I. (Texts) Vol. VIII. No. 557 and 572   இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.

அமண்குடி: திருச்சி தாலுகா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், அமண்குடி குறிக்கப்பட்டுள்ளது127. S.I.I. (Texts) Vol. VIII. No. 609    அரசனது 23 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் உறையூர் கூற்றத்து அமண்குடி யைக் கூறுகின்றது 128. do do No. 632  இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.
பழைய சங்கடம்: குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி. இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.129. Trichinopoly gazetter Vol. I. P. 282இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம்: குளித்தலை தாலுகா சீயாலத்தில் சுண்டக்காபாறை என்னும் குன்றில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.130. Top. Ins. Vol III. No. 132

குத்தாலம்: தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் பரதேசிப் பொடவு என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன.131. Ep. Rep. 1912, P.57. Top. Ins. Vol.III No. 339

வீரப்பட்டி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக்கருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது 132. An. Rep. Arch. Dept. S. Circle, 1909-10 P.19

ஜம்புகேஸ்வரம்: திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஜம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரிவர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16 ஆவது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், கவிராஜப் பெரும்பள்ளி, என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது133. 32 of 1937-38திருமலைவாடி: இங்குக் குந்தவைப் பிராட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S.I.I. Vol.I.67&68) இந்த அரசியார் வடஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் சமணக் கோயில்களைக் கட்டியுள்ளார்.

பெரியம்மா பாளையம்: பெரம்பலூர் தாலுகா பெரம்பலூருக்கு வடகிழக்கே 14 மைல். இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூடுண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன.134. Top. List, P.263

அம்பாபுரம்: இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாளையம் தாலுகாவில் உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இங்குச் சில சமண உருவங்கள் இருக்கின்றன.135. Top. List P 264.

ஜயங்கொண்ட சோழபுரம்: உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5 மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருங்கள் உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருத் திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்136.136. Top. List. P.265

வண்ணம்: உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பாளையத்துக்குத் தென்மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப்பளூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது137. Top. List. P.266

லால்குடி: திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைல். இவ்வூருக்கருகில், புள்ளம்பாடிக்குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலியே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது138. Top List, P. 267

மகாதானபுரம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 13 மைலில் உள்ளது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன139. Top. List, P. 269
சிவாயம்: குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது140. Ind. Anti. 1875. Vol IV P. 272, Top. List, P. 269


வெட்டுவாந்தலை: குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன.142. Top. List, P. 270உங்களை வணங்குகிறேன்
indiatimes,thehindu,,dinamani.com நன்றி 
                                            A. Selvamani

சுண்டைக்காப்பாறை: குளித்தலைக்குத் தெற்கே 3 மைல்இக்கிராமத்தில் ஒரு பாறையின் மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது141. Top. List, P. 269.
சுண்டக்காபாறை சுற்றுலாத் தலமாகுமா? குடவாயில் பாலசுப்ரமணியன்
By dn
First Published : 22 September 2013 08:47 AM IST
·        
கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை நெடுவழியில் குளித்தலையிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் ஐயர்மலை என அழைக்கப்பெறும் திருவாட்போக்கி மலை உள்ளது. இம்மலை இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை என்றும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியிலுள்ள திருவாட்போக்கி மகாதேவர் திருக்கோயில் ஈசனை திருநாவுக்கரசர் ஒரு தேவாரப் பதிகம் பாடிப் போற்றியுள்ளார். மலைக்கோயில் மட்டுமின்றி அழகிய கற்றளி ஒன்றும் உள்ளது. அதனை ""சிவபுரீஸ்வரர் திருக்கோயில்'' என்று தற்காலத்தில் அழைப்பர். அங்குள்ள சோழர் கல்வெட்டுக்கள் அக்கோயிலினை திருவாலீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில் என்றே கூறுகின்றன.
 காலையில் கடம்பந்துறை எனப்பெறும் குளித்தலை (குளிர்த்தண்டலை) கடம்பர் கோயிலிலும், நண்பகல் மாணிக்கமாலை இரத்தினகிரீசர் கோயிலிலும், மாலை திருஈங்கோய் மலைக் கோயிலிலும் வழிபாடு செய்வதை சைவர்கள் புனிதமாகப் போற்றுவர். திருவாட்போக்கி ஈசனாரைத் தரிசிக்க மாணிக்கமலை மீது 1140 படிகளை ஏறிக் கடந்து செல்ல வேண்டும். சோழப் பேரரசர்கள் காலந்தொட்டு நண்பகலில் காவிரிப் பேராற்று நீரால் அபிஷேகம் காண்பவர் முடித்தழும்பராகிய மாணிக்க ஈசர்.
 இராசராசசோழன் காலத்தில் திருவாட்போக்கி மலை திகழும் அத்திருவூர் சிவபாத சேகரபுரம் என அழைக்கப்பெற்றது என்பதை அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. குறுநங்கை நாடு என்றும் குருநாகன் நாடு என்றும் சோழராட்சியில் அழைக்கப்பெற்ற கேரளாந்தக வளநாட்டு நாட்டுப் பகுதியில் சிவபாதசேகரபுரம் இருந்தது. இவ்வூரின் பெயர் காலப்போக்கில் சிவாயம் என மருவிவிட்டது. திருவாட்போக்கி மலையும் ஐயர் மலை என்ற பெயராலேயே நிலைத்துவிட்டது.
 ஐயர் மலைக்கு வடமேற்காக ஒரு கி.மீ. தொலைவில் "சுண்டக்காபாறை' என்றும் குண்டாங்கல் என்றும் மக்கள் வழக்கில் குறிப்பிடப்பெறும் முட்டை வடிவப் பாறை ஒன்று ஒரு சிறு குன்றின் முகட்டின் மீது அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 அடி உயரமுடைய அவ்வுருண்டை வடிவக்கல்லின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தாங்கு பாறையின் மேல் அழுந்தி நிற்கும் காட்சி நம்மை அதிசயிக்க வைக்கும். சுண்டக்காபாறையின் கிழக்கு முகத்தின் பக்கவாட்டில் ஒரு நீள சதுர பகுதி வெட்டுவிக்கப்பெற்று அதில் உன்னத சிற்பக்காட்சி ஒன்றினைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இச்சிற்பப் படைப்பு கி.பி. 4ஆம் நூற்றாண்டிலோ அல்லது அதற்கு முன்போ படைக்கப்பெற்றிருக்க வேண்டும். 
 முக்குடைகளுக்குக் கீழாக, தலைக்குப் பின் திகழும் ஒளிவட்டத்துடன், சிம்ம ஆசனத்தின்மேல் பத்மாசனத் தியான கோலத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். கையில் மலரேந்திய வண்ணம் தேவிமார் உடன் நிற்க, இருவர் இருபுறமும் மகாவீரரைப் போற்றி நிற்கின்றனர். மேலே யக்ஷர் இருவர் சாமரம் வீச இருவர் விண்ணில் மிதந்தவாறு மலர்தூவி வழிபாடு செய்கின்றனர். இச்சிற்பங்களின் உருவ அமைதியும், மகாவீரர் அமர்ந்துள்ள ஆசன அமைப்பும் அமராவதி கோலி ஆகிய இடங்களில் கிடைத்த பௌத்த, சிற்பங்களின் கலையமைதியை ஒத்தே திகழ்கின்றன. எப்படி நோக்கினும் தமிழகத்தில் கிடைத்துள்ள சமண சிற்பப் படைப்புகள் வரிசையில் மிகப் பழைமையானது இது என்பதில் ஐயமில்லை.
 
எழிலார்ந்த இந்தச் சிற்பத்தைத் தாங்கி நிற்கும் சுண்டக்கா பாறையின் கீழ் சமண முனிவர்கள் படுப்பதற்காக செய்யப்பெற்ற ஐந்து கல் படுக்கைகள் உள்ளன. அந்தப் படுக்கைகளுக்கு அருகே தொல் பழங்கால எழுத்துக்களில் ""சீய மித்திரன்'', ""வீரமல்லன்'' என்ற இருவர் பெயர் பொறிப்புகள் காணப்பெறுகின்றன. இவை கி.பி. 2-3ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பொறிப்புகளாக இருத்தல் கூடும். இந்தக் கல்வெட்டுப் பொறிப்புகளுக்கு அருகே அதே காலத்தைச் சார்ந்த""யாகரடு'' என்ற கல்வெட்டுப் பொறிப்பும் அருகே சில கற்படுக்கைகளும் காணப்பெறுகின்றன. இப்பொறிப்பால் சுண்டக்கா பாறை என்றும் குண்டாங்கல் என்றும் அழைக்கப்பெறும் அந்த உருண்டைப் பாறை இருக்கும் இடத்தின் பழம்பெயர் ""யாகரடு'' என்பதறிகிறோம். யாகரட்டில் இருந்து தென்கிழக்கே பார்த்தால், மாணிக்கமலையின் பேரெழிலைக் கண்டு மகிழலாம். இங்கு வட்ட கிணறு போன்ற இயற்கை மழைநீர் சேமிப்பு சுனை ஒன்றும் உள்ளது. அக்காலத்தில் இதனைச் சமணத் துறவிகள் 
 குடிநீருக்காகப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்பப் படைப்புகளுள் ஒன்றாகத் திகழும் ஐயர்மலை சுண்டக்கா பாறைச் சிற்பம் சுற்றுலா விரும்புவோர், கலை ரசிகர்கள் மற்றும் தல யாத்ரீகர்கள் பார்வையில் படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஓர் ஆண்டுக்குப் பத்து பேராவது இங்கு வருகை புரிந்து இக்கலைப் பேழையைக் கண்டு மகிழ்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
 திருச்சிராப்பள்ளி - கரூர் சாலையிலும், திருச்சிராப்பள்ளி - நாமக்கல் சாலையிலும் பயணம் செய்வோர் முறையே குளித்தலை, முசிரியிலிருந்து ஐயர் மலையை அடையலாம். திண்டுக்கல் - திருச்சி சாலையில் செல்வோர் மணப்பாறையிலிருந்து தோகைமலை வழியே ஐயர் மலைக்குச் செல்லலாம். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையினர் தங்கள் சுற்றுலாக்களில் சுண்டக்கா பாறையையும் இணைத்தால் பயணிகள் பயன்பெறுவர். இந்தச் சின்னம் முறையாகப் பாதுகாக்கப் பெறாவிட்டாலும் இங்கு நடுவண் அரசின் தொல்லியல் பாதுகாப்புத் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னம் என்ற அறிவிப்புப் பலகை நின்று கொண்டிருப்பது ஆறுதலான செய்தியாகும். 
 


kundankal parai
திருச்சிராப்பள்ளி(Thiruchirapalli)


ஊர்ப்பெயர்க்காரணம்

சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சமண முனிவர்களின் கற்படுகைகள் பல கற்தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். இத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து வந்துள்ளமை அறியப்படுகிறது. அவர்களுள் 'சிரா' என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராய் இருந்தமைப் பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கப் பட்டு அவர் காலத்திற்குப் பிறகும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று.
`சிராப்பள்ளி`` என்றதன் பெயர்க்காரணத்தைப் பற்றி நமது சரித்திரப் பேரறிஞர் தி.வி. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழில் எழுதிய சுருக்கக் கருத்து இங்கே தரப்பெறுகின்றது. சிராப்பள்ளிக் கோயில் கட்டியவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நமது அப்பரடிகளை வருத்திச் சைவனான முதல் மகேந்திரவர்மனே. அவன் இத்தலத்து எட்டு சுலோகங்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்று அமைத்திருக்கிறான். அதில் தான் சைவனானதையும்(S.I.I. Vol. I No. 33, 34.) திருவதிகையில் அமண் பள்ளிகளையிடித்துக் குணபரேச்சுரம் கட்டியதையும் குறிப்பிடுகின்றான். குணபரன் என்பது மகேந்திரவர்மனையே குறிக்கும் பட்டப் பெயர். இதனைச் சிராப்பள்ளியிலும், செங்கற்பட்டு வல்லத்திலும் உள்ள குகைக் கோயிற்கல்வெட்டுக்கள் வலியுறுத்தும். அதைப் போலவே சிராப்பள்ளியாகிய இவ்விடத்தும் அமணப்பள்ளி ஒன்று பெரியதாக இருந்தது. அதனை இடித்தே இந்தக் கோயிலைச் சைவனான மகேந்திரவர்மன் கட்டினான்(S.I.I. Vol. I No. 33).

உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின்பாகத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காணலாம். அவற்றில் அந்தந்தப் படுக்கையிலிருந்த சமணமுனிவர் பெயர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. அவைகள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் நிகழ்ச்சிகள். அவர்களில் ஒருவர் சிரா என்னும் பெயருடையவர் என்று ஒரு கற்படுக்கை அறிவிக்கிறது. ஆதலால் பள்ளிகோயிலானாலும், பெயர் போகாமல் சிராப்பள்ளி எனவே வழங்குகிறது.Thiruchirapalli
                                  Malikottai hills west side natural caviron are there here
 one  brahmi inscription.   period 3 rd centuary
  25: 1. .. பன் கே
  25: 1. .. 𑀧𑀷𑁆 𑀓𑁂
என்பது அறியக்கிடைக்கும் எழுத்துகளாகும்

 This read from Dr. Iravatham Mahadevan  books..


In Tamil Nadu, the earliest existing religious vestiges are the natural caves. These caves once served as the habitats of Jaina monks, found in some of the hills in Tirunelveli, Madurai, Pudukkottai, Periyar, Trichy and erstwhile South Arcot and North Arcot districts. The numbers of these vestiges have reached more than one hundred so far due to the tireless efforts of the archaeologists over the last five decades. 

These early caves were found amidst picturesque surroundings. These were the residence of mendicants who resolved to spend their lives in splendid isolation and engaged themselves in contemplation and religious pursuits. These Jaina caves in Tamil Nadu are important for numerous reasons. The earliest lithic monuments of this region were represented by them. The earliest epigraphic records in Brahmi characters can be seen in these caves. These belonged to a period from the 2nd century BC to the 3rd or 4th century AD and above all they provide authentic evidence of the early spread of Jainism in Tamil Nadu. 

These early vestiges were the resorts of the hermits. These caves were made suitable for habitation by cutting stone beds in them. The beds were chiseled smooth raising one side a little to serve as pillows. To prevent rainwater flowing into the cave shelters, the overhanging rock was cut in the form of drip-ledge. These caves were often provided with structural additions in front in the form of thatched roof, which was supported by wooden poles. This fact is proved from several holes cut into the open rock surfaces of the caves, which are well visible now. Most of these vestiges of Tamil Nadu were near springs of water, which served the basic needs of the austere. 

The early Jaina caves were discovered from almost all the districts of Tamil Nadu. But most of them were recovered from Madurai. Approximately, twenty-six caves with not less that one hundred and forty stone beds were recovered from places like Anaimalai, Alagarmalai, Arittapatti, Tiruparankundram, Muttupatti, Vikramangalam, Tiruvatavur and Varichiyur. All these places are located within a radius of 20 miles from Madurai town. The 2nd to 1st century BC Brahmi records can be seen in these early vestiges of Tamil Nadu. These refer to the names of the resident monks as well as the laity who caused stone beds to be cut. 

The next district of Tamil Nadu having maximum number of the vestiges is the Trichy district. The three pallis (Jain temples) at Pugalur, Sivayam and Trichy Rock Fort are among the important vestiges of Tamil Nadu. There are three caves found in South Arcot also. These are at Jambai, Paraiyanpattu and Tirunathankunru but they belong to a slightly later in date. There are two other places of Tirunelveli district of Tamil Nadu named Kutrralam and Marukaltali, where the two early Jaina centres with cave beds and Brahmi records can be found. Few other interesting lithic records can be seen in Pudukkottai, Pasumpon, Periyar and North Aroct districts of Tamil Nadu. 

Besides these, Pudukkottai, Sittannavassal, South Arcot and North Aroct districts have about 30 more natural caves with a series of stone beds. But there is no sign of any early Brahmi inscriptions there. So, they cannot be rendered as a part of the early period. The available sculptural and epigraphic evidence from the above mentioned centres belong to the 8th and 9th centuries AD. The sculptures representing Tirthankaras, yakshas and yakshas were suppose to be added to the already existing Jaina foundation.
courtesy Indianetzone.

1 comment:

  1. Thank you Mr. Appandairaj Selvamani for enlightening us about Samanam in Chozha Mandalam. Because of your good efforts we came to know so many informations about Jaina heritage in Chozha Mandalam.

    ReplyDelete